தமிழ்நாடு செய்திகள்முக்கிய செய்திகள்

பா.ஜ.க.வுடன் கூட்டணி தொடர்கிறது, எதிர்காலத்திலும் தொடரும் – ஓ.பன்னீர்செல்வம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 3
    Shares

கீழடி அகழ்வாராய்ச்சி தொடர்ந்து நல்ல முறையில் நடக்கும். கீழடி அகழ்வாராய்ச்சிக்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது என்று துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்

பா.ஜ.க.வுடன் கூட்டணி எதிர்காலத்திலும் தொடரும் என்று துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் தமிழக துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டியில், ‘ நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான முதலமைச்சர் மற்றும் என்னுடைய சுற்றுப்பயணம் விரைவில் அறிவிக்கப்படும்.

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி ஏற்பட்டது. இன்று வரை அது தொடர்ந்துக் கொண்டு இருக்கிறது. எதிர்காலத்திலும் தொடரும் என்று கூறினார்.

இதேபோல் அதிமுகவின் அடிப்படை கொள்கையே நீட் தேர்வு தேவையில்லை என்பது தான்.

இதை அதிமுக தொடர்ந்து வலியுறுத்தும். கீழடியில் சோதனை மேலும் 2 வாரங்கள் நடக்கும் என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார்.

கீழடி அகழ்வாராய்ச்சி தொடர்ந்து நல்ல முறையில் நடக்கும்.

கீழடி அகழ்வாராய்ச்சிக்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. மேலும் தேவையான நிதி ஒதுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

ரூ.1 கோடி சம்பளம் பெறும் பிக்பாஸ் போட்டியாளர்!


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 3
    Shares
Tags
Show More

Related Articles

Back to top button
Close