தமிழ்நாடு செய்திகள்முக்கிய செய்திகள்

மாமல்லபுரத்திற்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு நிறைவடைந்ததை அடுத்து இன்று முதல் மாமல்லபுரத்திற்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிப்பட உள்ளனர்.

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்த சீன அதிபர், மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

இருவரின் வருகையையொட்டி கடந்த 10, 11 ஆகிய தேதிகளில் மாமல்லபுரத்தில் உள்ள அர்ஜூணன் தபசு, ஐந்து ரதம், வெண்ணை உருண்டை பாறை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் சுற்றிப் பார்ப்பதற்கு தொல்லியல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டிருந்தது.

தலைவர்களின் சந்திப்பு நிறைவடைந்ததையடுத்து, மாமல்லபுரத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் தளர்த்தப்பட்டு, இன்று முதல் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட நிர்வாகம் மற்றும் தொல்லியல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர்கள் அன்பும், உபசரிப்பும் தனித்துவமானது! மோடி உருக்கம்

Tags
Show More

Related Articles

Back to top button
Close