இந்தியா செய்திகள்

மனைவியை நண்பருடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கணவர்

தனது மனைவியின் கை, கால்களைக் கட்டிப் போட்டு நண்பருடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்முறை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் கதிரியில் உள்ள சோமேஷ் நகரில் வசித்து வரும் மல்லேஷ்க்கும் சித்தக்கூறு கிராமத்தை சேர்ந்த ஈஸ்வரிக்கும் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

மல்லேஷ் மேஸ்திரியாக வேலை செய்யும் நிலையில், தினந்தோறும் மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்து சண்டை போடுவது வழக்கம். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மது அருந்தி தன்னுடன் அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவரை மல்லேஷ் வீட்டிற்கு அழைத்து வந்தார்.

மதுபோதையில் இருவரும் ஈஸ்வரியின் கை கால்களைக் கட்டிப் போட்டு விஜயகுமாருடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது ஈஸ்வரி அலறி சத்தம் போடவே இருவரும் சேர்ந்து அவரை அடித்து உதைத்துள்ளனர். இந்த சம்பவத்தை வெளியே சொல்ல முடியாமல் தவித்த ஈஸ்வரி சித்தக்கூறில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்றார். நடந்த கொடுமையை தனது தாயாரிடம் கூறி போலீசில் புகாரளித்தனர்.

இதையடுத்து கதிரி மருத்துவமனையில் ஈஸ்வரியை சிகிச்சைக்காக போலீசார் அனுமதித்தனர். அவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் ஈஸ்வரின் கணவர் மல்லேஷ் மற்றும் அவரது நணபர் விஜயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் பாருங்க :

இலங்கை

தமிழகம்

இன்றைய ராசிபலன்

உலக செய்திகள்

https://youtu.be/VLFDcUCsPW4

Tags
Show More

Related Articles

Back to top button
Close