Breaking News
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

பள்ளி மாணவியைப் பலாத்காரம் செய்த ஆசிரியரை பொது மக்கள் அடித்து நிர்வாணமாக்கி இழுத்துக் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரப்பிரதேச மாநிலம், எலுரு என்ற கிராமத்தில் நந்தினி என்ற சிறுமி 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த மாணவியை அதே பள்ளியில் பணியாற்றும் ஆங்கில ஆசிரியரான ராம்பாபு என்பவர் தேர்வில் அதிக மார்க் வழங்குவதாக ஆசைவார்த்தை கூறி கடந்த 2 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

இதனால் சிறுமி கர்ப்பமடைந்ததையடுத்து கருவைக் கலைப்பதற்கான மத்திரைகளை வாங்கிக் கொடுத்துள்ளார்.

கரு கலைப்பு மாத்திரையினால் சிறுமியின் உடல்நிலை மோசமாகியுள்ளது. இதையடுத்து மருத்துவ பரிசோதனையின் மூலம் உண்மைகள் வெளிவந்துள்ளன. இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் ஆசிரியர் ராம்பாபுவை அடித்து, ஆடைகளைக் களைந்து நிர்வாணப்படுத்தியுள்ளனர், இதனையடுத்து ராம்பாபுவை அப்படியே ஊர்வலமாகச் சாலை வழியாகக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பாக ஆசிரியர் ராம்பாபு மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …