தமிழ்நாடு செய்திகள்முக்கிய செய்திகள்

இஸ்லாமியர்களுக்கு பல்வேறு அறிவிப்பு: முதல்வர் பழனிசாமி

இஸ்லாமியர்களுக்கு பல்வேறு அறிவிப்புகளை 110 விதியின் கீழ் வெளியிட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

இஸ்லாமியர்களுக்கு பல்வேறு அறிவிப்பு: முதல்வர் பழனிசாமி

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை, மதுரை உள்பட தமிழகம் முழுவதும் பேரணி நடைபெற்று வருகிறது.

சென்னையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்துகின்றன. தடையை மீறி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட பேரணியாக சென்றனர்.

அடையாள அட்டை , தேசிய கொடியுடன் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோஷமிட்டபடி இஸ்லாமியர்கள் பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டம் தற்போது நிறைவு பெற்று உள்ளது.

இந்த நிலையில் சட்டப்பேரவையில் இன்று விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இஸ்லாமியர்களுக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

சென்னையில் ரூ.15 கோடியில் ஹஜ் இல்லம் கட்டப்படும் என்றும், உலமாக்களுக்கான ஓய்வூதியம் ரூ.1500-ல் இருந்து ரூ.3000 ஆக உயர்த்தப்படும். உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க ரூ.25 ஆயிரம் நிதி என்றும் அறிவித்தார்.

சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையிலும், மசூதிகளுக்கான பராமரிப்பு செலவு ரூ.5 கோடியாக அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமியர்களுக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு நன்றி தெரிவித்து அமைச்சர் நிலோஃபர் கபில் பேசும் போது இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறார் முதலமைச்சர் என கூறினார்.

இந்தியாவுக்கு சும்மா தான் வரேன்

சீனாவில் பலி எண்ணிக்கை 2000 ஆக உயர்வு

Tamil News
Tamilnadu News
World Tamil News

Tags
Show More
Back to top button
You cannot copy content of this page
Close