Breaking News
ஊடகவியலாளர் மீது தாக்குதல்- சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது

ஊடகவியலாளர் மீது தாக்குதல்- சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது

ஊடகவியலாளர் மீது தாக்குதல்- சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது

முல்லைத்தீவு மாவட்டத்தை தளமாக கொண்டு இயங்கும் இரண்டு செய்தியாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு காவல்துறை பொறுப்பதிகாரி எமது செய்திச் சேவைக்கு இந்த விடயத்தை தெரிவித்தார்.

சூரியன் எப்.எம். வானொலியின் முல்லைத்தீவு பிராந்திய செய்தியாளர் சண்முகம் தவசீலனும், மற்றுமொரு செய்தியாளரான கணபதிப்பிள்ளை குமணனும் முறிப்பு பகுதியில் வைத்து, சிலரினால் நேற்று தாக்கப்பட்டனர்.

குமிழமுனை மற்றும் முறிப்பு ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக இடம்பெற்று வந்த மரம் வெட்டும் நடவடிக்கை தொடர்பாக குறித்த இரண்டு செய்தியாளர்களும் நேற்றைய தினம் செய்தி சேகரிக்க சென்றுள்ளனர்.

இதன்போது, சட்டவிரோதமாக மரம் வெட்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட குழவினரால் அவர்கள் இருவரும் தாக்கப்பட்டனர்.

தமது உடமைகள் பறிக்கப்பட்டதுடன் தம்மை திருடர்கள் எனக்கூறி தாக்குதல் நடத்தியவர்கள் கைடயக்க தொலைபேசியில் காணொளியும் பதிவு செய்ததாக எமது வானொலியின் பிராந்திய செய்தியாளர் சண்முகம் தவசீலன் தெரிவித்தார்.

தாக்குதல் சம்பவம் தொடர்பாக முல்லைத்தீவு காவற்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பில் முல்லைத்தீவு காவல்துறை நிலைய பொறுப்பதிகாரியிடம் எமது செய்திச் சேவை வினவியது.

இதன்போது பதிலளித்த அவர், நான்கு பேர் குறித்த தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்பட்டுள்ள நிலையில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மற்றுமொருவரை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், மேலும் இருவர் அடையாளம் காணப்படாத நிலையில், அது குறித்த விசாரணைகள் இடம்பெற்று வருவதாக முல்லைத்தீவு காவல்துறை பொறுப்பதிகாரி குறிப்பிட்டார்.

பிராந்திய செய்தியாளர்கள் இருவர் மீது மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் வெளியிட்டு வருகின்றனர்.

இந்த தாக்குதல் சம்பவமானது, ஊடக அடக்குமுறையின் புதிய வடிவம் என யாழ். ஊடக அமையம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வவுனியா தமிழர் ஊடகவியலாளர் சங்கமும், அறிக்கை ஒன்றின் மூலம் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

தாக்குதல்தாரிகளை உடன் கைதுசெய்து நீதியின்முன் நிறுத்த வேண்டும் என்றும் வவுனியா தமிழர் ஊடகவியலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மன்னார் மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியமும், இந்த சம்பவம் தொடரிபில் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் ஆகியோர் இந்தச் சம்பவம் தொடர்பில், ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ள வேண்டும் என மன்னார் மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

About அருள்

Check Also

யாழில் கோர விபத்து - சாரதி பலி

யாழில் கோர விபத்து – சாரதி பலி

யாழில் கோர விபத்து – சாரதி பலி யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் இருந்து இராச வீதி ஊடாக பயணித்துக் கொண்டிருந்த …