Breaking News
ஆங் சான் சூகியின் கட்சி அதிக இடங்களில் முன்னிலை

ஆங் சான் சூகியின் கட்சி அதிக இடங்களில் முன்னிலை

ஆங் சான் சூகியின் கட்சி அதிக இடங்களில் முன்னிலை

மியான்மரில் 50 ஆண்டுகால ராணுவ ஆட்சிக்குப் பிறகு 2015-ல் ஜனநாயக ரீதியில் பொது தேர்தல் நடந்தது. ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக கட்சி பெரும் வெற்றி பெற்றது.

இந்தநிலையில் கொரோனா தொற்றுக்கு மத்தியில் மியான்மர் நாடாளுமன்றத்தின் இரு அவைகள், அங்குள்ள 7 மாநில சட்டப்பேரவைகள் மற்றும் 7 மண்டலங்கள் என மொத்தம் 1,171 இடங்களுக்கு நேற்று தேர்தல் நடந்தது.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் தேர்தல் நடந்தாலும் மக்கள் தங்கள் ஜனநாயக கடமை ஆற்ற மிகுந்த ஆர்வம் காட்டினார். இதனால் வாக்குப்பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையில் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி,வாக்குப்பதிவு முடிந்ததும் தொடங்கியது. விடிய விடிய நீடித்து வரும் வாக்கு எண்ணிக்கையில் ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாக கட்சி அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

இதனால், மீண்டும் அவரது கட்சியே ஆட்சியை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆங் சான் சூகி கட்சி முன்னிலை பெறத்தொடங்கியதும், கொரோனா கட்டுப்பாடுகளை காற்றில் பறக்கவிட்டுவிட்டு அவரது ஆதரவாளர்கள், பல இடங்களில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சுஷாவை அசர்பைஜான் ராணுவம் நேற்று கைப்பற்றியது.

About அருள்

Check Also

ரஷ்யாவில் புதிதாக 15,916 பேருக்கு கொரோனா பாதிப்பு

ரஷ்யாவில் புதிதாக 15,916 பேருக்கு கொரோனா பாதிப்பு

ரஷ்யாவில் புதிதாக 15,916 பேருக்கு கொரோனா பாதிப்பு ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 15,916 பேருக்கு கொரோனா …