இலங்கை செய்திகள்முக்கிய செய்திகள்

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகருக்கும் வட மாகாண ஆளுநருக்குமிடையில் முக்கிய சந்திப்பு

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகருக்கும் வட மாகாண ஆளுநருக்குமிடையில் முக்கிய சந்திப்பு

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரும் அவருடைய குழுவினரும் வட மாகாண ஆளுனர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸூடன் இன்று 10.02.2020 நண்பகல் ஆளுனர் இல்லத்தில் சந்தித்து உரையாடினார்கள்.

இச்சந்திப்பின் போது வடக்கில் மேம்படுத்தப்படவேண்டிய ஏற்றுமதித்துறை, சுற்றுலாத்துறை, விருந்தோம்பல் மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பான கற்கைநெறிகள். தாதியர்களுக்கான சர்வதேச தரத்திலான கற்கைநெறி, என்பன தொடர்பில் பரஸ்பரம் கலந்துரையாடப்பட்டன.

அடுத்த 5 வருடத்திற்கான திட்டங்களை முன்னெடுப்பதற்கான ஆர்வத்தை அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ஆவலுடன் வெளிப்படுத்தினார்.

குறிப்பிட்ட துறைகளில் முன்னெடுக்ககூடிய திட்டங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்ந்து சாத்தியப்படக் கூடியவற்றை விரைந்து செயற்படுத்த தம்மால் இயலுமானவற்றை செய்யத் தயாராக இருப்பதாக உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகளின் கருத்துக்களுக்கும் யோசனைகளும் நன்றி தெரிவித்த ஆளுநர் , அவர்களுடன் சேர்ந்து பணியாற்ற தாம் ஆர்வமுடனிருப்பதாகவும் தெரிவித்தார்.

Today rasi palan 11.02.2020 Tuesday – இன்றைய ராசிப்பலன் 11 பெப்ரவரி 2020 செவ்வாய்க்கிழமை

தேனி செந்தில் ஆண்டவர் திருக்கோவில் தைப்பூச உற்சவ விழா

Tamil News
Tamilnadu News
World Tamil News

Tags
Show More
Back to top button
You cannot copy content of this page
Close