Breaking News
Home / விடுதலை

விடுதலை

ஜப்பானில் சாதி இல்லையா?

ஜப்பானில் சாதி இல்லையா?

சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு வரை.இந்தியாவைப் போல தீண்டாமைக் கொடுமை தலைவிரித்தாடியது ஜப்பான் நாட்டிலும். கீழ் சாதி என்ற வார்த்தைக்கு பதிலாக ஜப்பானிய மொழியில் ‘புராக்குமீன்’ (Burakumin) என்று கூறி ஒரு பகுதி மக்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தனர். இந்தியாவில் இருப்பது போல அந்த மக்களை “சேரி” களிலும் ஒதுக்குப்புறமான இடங்களில் மட்டுமே வைத்திருந்தனர். அவர்களை தொட்டால் தீட்டு, வீட்டுக்குள் வந்தால் தீட்டு என்ற அனைத்து சாதிய அடக்குமுறைகளுமே இருந்தது. அவர்களுக்கு …

Read More »

தமிழகத்திற்கு தனி கொடி – திருமா போர்க்கொடி?

வன்னியர்

தமிழ்நாட்டுக்கென தனியே மாநிலக்கொடி ஒன்றை உருவாக்க வேண்டும் என எம்.பி. தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு தனி மாநிலமாக உருவாக்கப்பட்ட வரலாற்றை நினைவு கூறும் வகையில் இன்று முதல் முதலாக “தமிழ்நாடு நாள்’ கொண்டாடப்படுகிறது. 1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என பல கோரிக்கைகள் எழுந்தது. இதனை தொடர்ந்து 1950 வாக்கில் இந்தியாவில் உள்ள அனைத்து மாகாணங்களையும் மொழி வாரி மாநிலங்களாக …

Read More »

இரண்டரைக் கோடி ரூபா சம்பளம் பெறும் சமந்தா!

சென்னையில் பிறந்து வளர்ந்த சமந்தாவின் அம்மா மலையாளம், அப்பா தெலுங்கு. சென்னை பல்லாவரத்தில் வளர்ந்த சமந்தா, ஹோலி ஏஞ்செல்ஸ் பள்ளியில் படித்தவர். ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் பி.காம் படித்த சமந்தா, அப்போதே தனது செலவுகளுக்காக மொ டலிங் துறையைத் தேர்வுசெய்து சில விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தார். 1940களில் பொலிவூட்டில் பெரும் புகழுடன் இருந்த நடிகை ஆட்ரே ஹெப்பர்ன் தான் சமந்தாவின் ரோல் மாடல். தமிழில் ரேவதி நடித்த படங்கள் இவரது …

Read More »

மண்டைதீவில் கொல்லப்பட்ட 119 தமிழ் இளைஞர்கள்: சாட்சியத்தைப் பதிவுசெய்தார் சிறிதரன் எம்.பி.

யாழ். மண்டைதீவில் அமைந்துள்ளது எனக் கருதப்படும் மனிதப் புதைகுழிகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் இன்று வியாழக்கிழமை காணாமல்போனோருக்கான அலுவலகத்தில் சாட்சியம் பதிவு செய்தார். இன்று மாலை கொழும்பிலுள்ள காணாமல்போனோருக்கான அலுவலகத்தில் இந்த சாட்சியத்தை அவர் பதிவு செய்தார். காணாமல்போனோருக்கான அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் முன்னிலையில் சாட்சியம் பதிவு செய்யப்பட்டுள்ளது. மண்டைதீவில் அமைந்துள்ள புனித தோமையார் தேவாலயத்துக்கு எதிர்ப்புறம் அமைந்துள்ள காணியில் அமைந்துள்ள கிணறு, …

Read More »

சர்வதேச தமிழ் இதழியல் மாநாடு யாழில் நாளை ஆரம்பம்! – பேராசிரியர்கள், துறைசார் வல்லுநர்கள் பங்கேற்பு

நான்காவது சர்வதேச தமிழ் இதழியல் மாநாடு யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் நாளை வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. மக்கள் இதழியல் அமைப்பின் ஏற்பாட்டில் இரு நாட்களாக அமர்வு நடைபெறவுள்ளது. சென்னைப் பல்கலைக்கழக ஊடகத்துறை மற்றும் தொடர்பாடல் பிரிவு தலைவர் பேராசிரியர் கோபாலன் ரவீந்திரன் தலைமையில் நடைபெறும் ஆரம்ப நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமை விருந்தினராகக் கலந்துகொள்ளவுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரன் …

Read More »

சுன்னாகம் நிலத்தடி நீர் மாசு வழக்கு: 2 கோடி ரூபா இழப்பீடு வழங்க நொதேர்ன் பவர் நிறுவனத்துக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

யாழ்ப்பாணம், சுன்னாகம் நிலத்தடி நீர் மாசுபட்டது தொடர்பான வழக்கில் நொதேர்ன் பவர் நிறுவனத்துக்கு 20 மில்லியன் (2 கோடி) ரூபா இழப்பீடு விதிக்கப்பட்டுள்ளது. வலிகாமத்தை அண்டிய பகுதிகளின் நிலத்தடி நீரை அசுத்தப்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ள உயர்நீதிமன்றம், அந்தப் பிரதேசவாசிகள் 500 பேருக்கு இழப்பீடாக இந்தப் பணத்தை வழங்க உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் சில வருடங்களாக உயர்நீதிமன்றத்தில் நீடித்த இந்த வழக்குக்கு முடிவு எட்டப்பட்டுள்ளது. சூழல் மற்றும் இயற்கை ஆய்வு நிலையத்தின் சார்பில் பேராசிரியர் …

Read More »

அலரி மாளிகைக்கு முன் சோதனைச் சாவடியில் STF அதிகாரி தற்கொலை!

அலரி மாளிகையில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் விசேட அதிரடிப் படையின் உத்தியோகத்தர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தன்னுடைய உத்தியோகபூர்வ துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (04) காலை 08.35 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். வரகாபொல, கந்தகம பிரதேசத்தைச் ​சேர்ந்த 30 வயதுடைய …

Read More »

பல பெண்களைத் திருமணம் செய்து ஏமாற்றி வந்த மன்மதன் சிக்கினார்!

யாழ்ப்பாணத்தில் பல பெண்களைத் திருமணம் செய்து ஏமாற்றி வந்த இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் எனக் காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்புப் பொலிஸார் தெரிவித்தனர். மானிப்பாய், மருதடிப் பகுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார் எனப் பொலிஸார் குறிப்பிட்டனர். பத்திரிகை மூலம் மணமகள் தேவை என விண்ணப்பம் செய்தே இந்தச் சந்தேகநபர் பல பெண்களைத் திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார் என ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது. வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய …

Read More »

முல்லையில் சிறுமி மீது பாலியல் வன்கொடுமை! – இரு இளைஞர்கள் கைது

முல்லைத்தீவு – முள்ளியவளைப் பகுதியில் பதின்ம வயதுச் சிறுமி ஒருவரைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினார்கள் என்ற சந்தேகத்தில் இளைஞர்கள் இருவரைக் கைதுசெய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் பொலிஸார் மேலும் கூறுகையில், “பதின்ம வயதுச் சிறுமி ஒருவர் வீதியால் நடந்து சென்று கொண்டிருந்தபோது, இரண்டு இளைஞர்கள் சிறுமிமையைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனர். சிறுமி நடந்த சம்பவத்தை உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். உறவினர்களால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. முறைப்பாட்டையடுத்து இளைஞர்களை …

Read More »

பொறுப்புக்கூறல் இல்லாமல் நிலையான அமைதி கிட்டாது! – இலங்கையிடம் பிரிட்டன் இடித்துரைப்பு

நீதியும் பொறுப்புக்கூறலும் இல்லாமல் இலங்கையில் நிலையான அமைதி ஏற்படாது என்று பிரிட்டன் வெளிவிவகாரச் செயலர் ஜெர்மி ஹன்ட் தெரிவித்துள்ளார். இலங்கை விவகாரம் தொடர்பாக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளித்தபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கரேத் தோமஸ் என்ற நாடாளுமன்ற உறுப்பினர், “பெரும் மனித உரிமை மீறல் குற்றவாளிகளை நீதியின் முன்நிறுத்தத் தவறும் இலங்கை மீது எடுக்கும் நடவடிக்கைகள் என்ன?” என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குப் …

Read More »