Breaking News
அசர்பைஜான் மீது ஆர்மேனியா ஏவுகணை தாக்குதல் 21 பேர் பலி

அசர்பைஜான் மீது ஆர்மேனியா ஏவுகணை தாக்குதல் 21 பேர் பலி

அசர்பைஜான் மீது ஆர்மேனியா ஏவுகணை தாக்குதல் 21 பேர் பலி

அசர்பைஜான் நாட்டில் உள்ள பர்தா நகரத்தின் மீது ஆர்மேனியா ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது.

இந்த தாக்குதலில் அந்த நகரத்தின் அப்பாவி மக்கள் 21 பேர் பலியாகி உள்ளனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இதுபற்றி அசர்பைஜான் அதிபரின் செய்தி தொடர்பாளர் ஹிக்மெட் ஹாஜியெவ் கூறுகையில், “ மத்திய அசர்பைஜானில் உள்ள பர்தா நகரத்தின் மீது ஆர்மேனிய படைகள் பொதுமக்கள் மத்தியில் பெருத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்துவதற்காக கொத்து ஆயுதங்களை பயன்படுத்தி உள்ளன” என குறிப்பிட்டார்.

சமூக ஊடகங்களில் வெளியான படங்கள் அந்த நகர வீதிகளிலும், வாகனங்களிலும் ஏற்பட்டுள்ள சேதத்தையும், சாலைகளில் பைகளில் போடப்பட்டிருந்த மனித உடல்களையும் காட்டின. ஆனால் இந்த ஏவுகணை தாக்குதலை ஆர்மேனியா மறுத்துள்ளது.

கொரோனா இல்லாத நாடாக மாறிய தைவான்!

About அருள்

Check Also

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் போராட்டம்

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் போராட்டம்

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் போராட்டம் மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்தும், ஆங் சாங் சூகியை விடுதலை செய்யக்கோரியும் …