உலக செய்திகள்முக்கிய செய்திகள்

தொங்கிக்கொண்டிருந்த குழந்தையை சாதூர்யமாக காப்பற்றிய இளைஞர்: வைரல் வீடியோ!

மாலி நாட்டை சேர்ந்த மமூது கசாமா வேலை தேடி பிரான்ஸ் நாட்டிற்கு வந்திருப்பவர். இவர் செய்து ஒரு உதவியால் தற்போது இவர் அனைவரின் பாராட்டை பெற்றி வைரலாகி வருகிறார்.

இவர் சாலையில் நடந்து சென்றுக்கொண்டிருந்த போது, ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் முன்பு மக்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். எனவே கூட்டத்தை வேடிக்கை பார்க்க சென்றார்.

அப்போது அங்கு அந்த கட்டிடத்தின் 4 வது மாடியில் பால்கனியை பிடித்தபடி 4 வயது குழந்தை தொங்கி கொண்டிருந்தது. இதை கண்ட கசாமா கட்டிடத்தில் ஏறி ஸ்பைடர் மேன் போன்று ஏறி, குழந்தையை காப்பாற்றினார்.

இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது. மேலும் மமூது கசாமாவுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. கசாமாவை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரன் நேரில் அழைத்து பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சனிக்கிழமை மாலை, உயிரை பணயம் வைத்து நான்காம் மாடியில் இருந்து குழந்தையை காப்பாற்றிய Mamoudou Gassama, தற்போது சர்வதேச அளவில் பிரபலமடைந்துள்ளார்.

Mamoudou Gassama வை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் சற்று முன்னர் சந்தித்தார். அவருடன் உரையாடிய மக்ரோன், அவருக்கு பிரெஞ்சு குடியுரிமையும் வழங்கி, தீயணைப்பு படையில் வேலையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளார். மாலி நாட்டில் இருந்து அகதியாக நேற்றுவரை பரிசில் இருந்த Mamoudou Gassama, இன்று சர்வதேச அளவில் புகழடைந்துள்ளார். அவர் 32 வினாடிகளின் நான்காவது மாடிக்கு தாவி ஏறி, குழந்தையின் உயிரை காப்பாற்றியதை பல அரசியல் பிரமுகர்களும் பாராட்டத்தவறவில்லை.

ஆன் இதால்கோ முன்னதாக, ‘Mamoudou Gassama – 18 ஆம் வட்டாரத்தின் ஹீரோ!’ என புகழாரம் சூட்டியிருந்தார். பின்னர் இன்று காலை இவரை பிரபல பிரெஞ்சுத் தொலைக்காட்சி நேரடி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைத்தது. அதில் கலந்துகொண்ட Mamoudou Gassama, ‘நான் எது குறித்தும் யோசிக்கவில்லை. நான் அந்த குழந்தையை காப்பாற்றினேன்!’ என அவர் நிகழ்ச்சியில் குறிப்பிட்டார்.

கடந்த செப்டம்பர் 2017 ஆம் ஆண்டு மாலி நாட்டில் இருந்து அகதியாக பிரான்சுக்கு வந்துள்ளார். அதன் பின்னர் அகதிகள் தங்குமுகாமில் அவர் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எலிசே மாளிகையில் இருந்து Mamoudou Gassama வெளியே வரும்போது, ஊடகத்திடம் தெரிவிக்கும் போது, ‘ஜனாதிபதி எனக்கு ஒரு பரிசு தந்தார். இதுவரையில் என் வாழ்நாளில் அதை அனுபவித்ததில்லை!’ என அவர் குறிப்பிட்டார்.

இதோ அந்த வீடியோ…

Tags
Show More
Back to top button
You cannot copy content of this page
Close