Breaking News

வறம்பு மீறும் மகத்; வழக்காடும் பாலாஜி-மும்தாஜ்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது வழங்கப்பட்டுள்ள டாஸ்க்கில் மகத், ஐஸ்வர்யாவை இடித்ததை வைத்து பிரச்னையை பெரிதாக்க பிக் பாஸ் டீம் திட்டமிட்டுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 58வது நாளில் இந்த வாரத்துக்கான லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க் கொடுக்கப்பட்டது.

இந்த டாஸ்க்கிற்காக போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளனர், ஒரு குழாய் மூலம் பொம்மை செய்வதற்கான கருப் பொருட்கள் அனுப்பப்படும். குழாயின் இருபக்கமும் இரு அணிகளும் நின்று கொண்டு வரும் பொருட்களை சேகரிக்க வேண்டும்.

எந்த அணியினர் அதிக பொருட்களை சேகரித்து அதிக பொம்மைகளை செய்கிறார்களோ அவர்களே இறுதியில் வெற்றி பெறுவார்கள்.

இந்த டாஸ்க் துவங்கியதி இருந்தே இரு அணிகளும் கடுமையாக மோதிக் கொண்டு வாக்குவாதம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில், மகத் சகட்டுமேனிக்கு விளையாடுகிறார்.

ரூல்ஸை ஏதும் பின்பற்றுவது போல் தெரியவில்லை. ஆண்/பெண் என பாகுபாடின்றி தாக்குகிறார் போல.

ஐஸ்வர்யாவும், மகத்தும் ஒருவரை ஒருவர் கையை பிடித்து மடக்கி சண்டை போட்டுக் கொள்கின்றனர். நியாயமா விளையாடுங்கன்னு நாட்டமை செய்ய வந்த சென்ராயனை ரித்விகா நோஸ்கட் செய்து அனுப்புகிறார்.

இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள புரொமோ வீடியோவில், மகத்தின் செயலை கண்டித்து காண்டாகி பேசிக் கொண்டிருக்கும் பாலாஜி, சைக்கிள் கேப்பில் நீங்களும் பொண்ணு தானே, அவன மாதிரி உங்கள இடிக்கவா என மும்தாஜிடம் கேட்டு அவரை கடுப்பேற்றுகிறார்.

பாலாஜி ஐஸ்வர்யாவுக்கு ஆதரவாக பேசுவது போலவும், மும்தாஜ் மகத்துக்கு வக்காளத்து வாங்குவது போலவும் புரொமோ வீடியோவில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஆக ஐஸ்வர்யா-மகத் சண்டை டேக் டைவர்ஷன் எடுத்து பாலாஜி-மும்தாஜ் ரூட்டில் சென்றுள்ளது.

லக்ஸுரி டாஸ்க்கை வெல்வாரகளா என்று தெரியவில்லை, ஆனால், இந்த டாஸ்க்கில் நடந்த மொக்கை சண்டையை வைத்தே இந்த வாரத்தை கடத்திவிட பக்கா ப்ளான் போட்டுவிட்டதாகவே தெரிகிறது.

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …