Breaking News
போலி கண்ணீருக்கும்

போலி கண்ணீருக்கும் நீளி கண்ணீருக்கும் வித்தியாசம் இருக்கு

ஃப்ரீஸ் டாஸ்க்கிலும் பாலாஜியின் புறம்பேசும் பழக்கம் தொடர்கிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 10 வாரங்கள் கடந்த நிலையிலும், போட்டியாளர்கள் குறித்து புறம்பேசுவதை மட்டும் பாலாஜி மாற்றிக் கொள்ளாமல் இருப்பதாக பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கெட்ட வார்த்தை பேசுவதும், கோபப்படுவதையும் அன்றாட வழக்கமாக வைத்திருந்த பாலாஜி, போட்டியாளர்களை பற்றி அவர்களது பின்னால் புறம்பேசுவதையும் தொடர்ச்சியாக செய்து வருகிறார்.

தற்போது பிக் பாஸ் வீட்டில் நடக்கும் ஃப்ரீஸ் டாஸ்க்கில், போட்டியாளர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களது குடும்பத்தினரை சந்தித்து வருகின்றனர். இதில் பெரும்பாலும் அழுகாச்சி செண்டிமென்ட் காட்சிகளே இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், ஜனனி குறித்து மும்தாஜிடம் பாலாஜி டிஸ்கஸ் செய்யும் புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

ஃப்ரீஸ் டாஸ்க்கில், பாலாஜிக்கு அவரது மனைவியும், தோழியுமான நித்யா எழுதிய கடிதத்தில் போட்டியாளர்கள் பின்னால் பேசுவதை நிறுத்து என அட்வைஸ் கூறியிருந்தார். ஆனால், அந்த அட்வைஸை ஏற்காமல், பாலாஜி ஜனனி குறித்து பேசியுள்ளார்.

புதிய புரொமோவில், இந்த ஜனனி பொண்ணு மற்றவங்க குடும்பத்துல இருந்து யாராதும் வந்தா நடிக்கிறா. போலி கண்ணீருக்கும் நீளி கண்ணீருக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. இந்த பொண்ணு ஏன் இப்படி பண்றா? என மும்தாஜிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.

இந்த வார இறுதியில் ஃப்ரீஸ் டாஸ்க்கை வைத்து பாலாஜிக்கு குறும்படம் போடப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …