Breaking News
பாலாஜி

பாலாஜி ஸ்டாலினுடன் சந்திப்பு

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய தாடி பாலாஜி திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஜூன் மாதம் 17-ம் தேதி 16 போட்டியாளர்களுடன் தொடங்கியது.

100 நாட்கள் என்ற விதியை உடைத்து இந்த சீசனில் 105 நாட்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிகழ்ச்சியில், தற்போது ஜனனி, ஐஸ்வர்யா, ரித்விகா, விஜயலக்ஷ்மி, யாஷிகா, பாலாஜி ஆகிய 6 பேர் மட்டுமே இருந்தனர்.

இதனிடையே, இறுதி வாரத்துக்கான டாஸ்க்குகள் இவர்களுக்கு வழங்கப்பட்டது. கடுமையான டாஸ்க்குகளை வெற்றிகரமாக முடித்த இந்த 6 பேரில் கோல்டன் டிக்கெட் மூலம் இறுதி வாரத்துக்கு ஜனனி நேரடியாக செல்கிறார்.

அவர் தவிர எஞ்சிய 5 பேரில் இந்த வாரம் இருவர் வெளியேற்றப்படவுள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால் இந்த வாரம் இருவர் வெளியேற்றப்படவுள்ளனர்.

பிக் பாஸ் வீட்டில் பல்வேறு விஷயங்கள் நடந்தாலும், வாராவாரம் நடக்கும் எவிக்‌ஷன் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, இந்த வாரம் வெளியேறப் போகும் இருவர் யார் என்ற எதிர்பார்ப்பு பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது.

அந்த வகையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறவுள்ள இருவரில் தாடி பாலாஜி நேற்று வெளியேறினார். இதையடுத்து, பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய தாடி பாலாஜி திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

திமுக நிர்வாகியான தாடி பாலாஜி, முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவின் போதும், திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற போதும் பிக் பாஸ் வீட்டில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …