Breaking News
பாலாஜியை

பாலாஜியை அசிங்கப்படுத்திய ஐஸ்வர்யாவை கழுவி ஊத்தும் நித்யா

ஐஸ்வர்யா பாலாஜி மீது குப்பையை கொட்டும் போது நான் இருந்திருந்தால் கண்டிப்பாக தட்டி கேட்டிருப்பேன் என்று பாலாஜியின் மனைவி நித்யா கூறியுள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக சர்வாதிகாரி ராணியாக இருந்த ஐஸ்வராயாவின் நடவடிக்கைகள் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் கோபத்தையும் எரிச்சலையும் ஏற்படுத்தியது. குறிப்பாக பாலாஜி மீது குப்பையை கொட்டிய விவகாரத்தில் இதுவரை ஒருவர் கூட ஐஸ்வர்யாவின் செயலை நியாயப்படுத்தவில்லை

இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளராக இருந்தவரும் பாலாஜியின் மனைவியுமான நித்யா இது குறித்து அளித்துள்ள பேட்டியில், ‘நான் ஒருவேளை அந்த இடத்தில் இருந்திருந்தால் நிச்சயம் ஐஸ்வர்யாவை தட்டி கேட்டிருப்பேன்.

பிக்பாஸ் விதிப்படி ராணியை அவமரியாதை செய்பவரை ஜெயிலில் தான் போட வேண்டுமே தவிர குப்பையை எடுத்து மேலே கொட்டுவது மனிதத்தன்மையற்ற செயல். இதை யாராலும் ஏற்று கொள்ள முடியாது’ என்று கூறியுள்ளார்.

ஐஸ்வர்யாவின் இந்த செயலை அந்த வீட்டின் சீனியரான பொன்னம்பலம், ஐஸ்வர்யாவை தட்டி கேட்டிருக்கலாம் என்றும் அவர் அமைதியாக இருந்தது தனக்கு ஏமாற்றத்தை அளித்தது என்று தன் எண்ணத்தை கூறியுள்ளார்.

பாலாஜி ஐஸ்வர்யா அசிங்கப்படுத்தியதை பொறுத்து கொண்டு அமைதியாக இருந்தது அவர் தனது கோபத்தை 50% குறைத்து கொண்டார் என்பதை நமக்கு சொல்லாமல் சொல்கிறார் என்று கணவர் பாலாஜியை புகழ்ந்துள்ளார்.

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …