Bigg Boss Tamil Season 3முக்கிய செய்திகள்

ரூ.1 கோடி சம்பளம் பெறும் பிக்பாஸ் போட்டியாளர்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர் ஒருவர் ரூ.1 கோடி சம்பளம் பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல் இரண்டு சீசன்களின் வெற்றியைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

தொலைத்தொடர்பு, இணையம் உள்ளிட்ட எந்த வெளியுலகத் தொடர்பும் இல்லாமல் 100 நாட்கள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி விதி.

முதல் சீசனில் நடிகர் ஆரவ்வும், 2-வது சீசனில் ரித்விகாவும் வெற்றி பெற்ற நிலையில் தற்போது ஒளிபரப்பாகும் 3-வது சீசனில் டைட்டிலை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

பிக்பாஸ் டைட்டிலை வெல்லும் போட்டியாளருக்கு ரூ.50 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.

இதேபோல் இந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 13-வது சீசனை பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த திங்கள் அன்று அறிமுகப்படுத்தினார்.

செப்டம்பர் 29-ம் தேதி முதல் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் நடிகை ரஷாமி தேசாய் தன்னுடைய காதலர் அர்ஹான் கானுடன் இணைந்து பிக்பாஸ் 13-ல் கலந்து கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.

நடிகை ரஷாமி தேசாய், 2012-ம் ஆண்டு நடிகர் நந்திஷ் சாந்துவைத் திருமணம் செய்து பின்னர் இருவரும் பிரிந்துவிட்டார்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நடிகை ரஷாமி தேசாய்க்கு ரூ.120 கோடி சம்பளம் பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத்தொகை நிகழ்ச்சியின் பரிசுத் தொகையைவிட அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

81 வயது பாட்டியை திருமணம் செய்த 24 வயது இளைஞர்!

Tags
Show More

Related Articles

Back to top button
Close