கவின்

இனி கவின் தொட்டதெல்லாம் வெற்றியாகவே பிக்பாஸால் மாற்றப்படும்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சமீபநாட்களாக காதல் டிராமா எதையும் அரங்கேற்றாமல் டாஸ்க் , கேம் என்று மிகவும் கவனத்துடன் போட்டியாளர்களை வெற்றியை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றனர்.

அந்தவகையில் தற்போது வெளிவந்துள்ள இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வீடியோவில் நேரடியாக ஃபைனலுக்கு செல்வதற்காக ஒரு புது விதமான டாஸ்க் கொடுத்துள்ளனர். இதில் சேரன், சாண்டி , ஷெரின் , தர்ஷன் , முகன் , கவின் , லொஸ்லியா என மொத்தமுள்ள 7 போட்டியாளர்களும் பங்கேற்கின்றனர். காலில் வெயிட்டான எடை திராஷை தாங்கவேண்டும் என்பது தான் இந்த டாஸ்க்.

Bigg Boss Tamil

#Day86 #Promo3 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3

Posted by Vijay Television on Tuesday, 17 September 2019

இந்த டாஸ்க்கில் லொஸ்லியா , கவின் , முகன் தவிர மற்ற 4 பேரும் தோற்று விட்டனர். கவின்- லொஸ்லியாவும் எப்படியாவது ஜெயிக்கவேண்டும் என்று கடைசிவரை வலியை தாங்கிக்கொண்டு டாஸ்கை செய்கின்றனர். இதில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதை இன்று ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் பார்க்கலாம்.

இந்த ப்ரோமோ வீடியோவை கண்ட நெட்டிசன்ஸ் “அவ்ளோவ் தான் இனிமேல் விஜய் டிவியின் செல்ல பிள்ளை எல்லா டாஸ்கிலும் சிறப்பாக செய்து வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்” என கவினை கிண்டலடித்து விஜய் டிவியை ட்ரோல் செய்து வருகின்றனர்.

இந்தியை திணிக்க முடியாது – ரஜினிகாந்த்

Check Also

இந்தியாவிலிருந்து 320 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

இந்தியாவிலிருந்து 320 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

இந்தியாவிலிருந்து 320 இலங்கையர்கள் நாடு திரும்பினர் கொரோனா தொற்றுக் காரணாக இந்தியாவில் சிக்கித் தவித்த 320 இலங்கையர்கள் இன்றையதினம் சிறப்பு …