Breaking News
லக்ஸுரி பட்ஜெட் ஸ்வாஹா

லக்ஸுரி பட்ஜெட் ஸ்வாஹா..!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரத்துக்கான லக்ஸுரி பட்ஜெட்டுக்கான புள்ளிகளை பிக் பாஸ் ரத்து செய்துவிட்டார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஃப்ரீஸ் டாஸ்க்கில் லக்ஸுரி டாஸ்க் பட்ஜெட் உண்டு என பிக் பாஸ் அறிவித்திருந்தார்.

ஆனால், ஃப்ரீஸ் டாஸ்க்கில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வந்ததால் உணர்ச்சிக்கும், பாசத்திற்கும் இடம் கொடுத்த போட்டியாளர்கள் லக்ஸுரி டாஸ்க்கை மறந்துவிட்டனர்.

பிக் பாஸ் விதித்த கட்டளைகளை பின்பற்றாமல் விதிகளை மீறியதால் லக்ஸுரி டாஸ்க்கிற்கு வழங்கப்படும் புள்ளிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக பிக் பாஸ் அறிவித்துவிட்டார்.

இது குறித்து அறிந்த போட்டியாளர்கள் யாருக்குமே லக்ஸுரி பட்ஜெட்டுக்கான புள்ளிகள் கிடைக்கவில்லை என மகிழ்ச்சியடைந்தனர்.

தங்களது குடும்பம் தான் பிக்கஸ்ட் லக்ஸுரி டாஸ்க் என மும்தாஜ் கூறியதும் பாலாஜியின் முகம் போன போக்கிற்கு காரணம் என்னவாக இருக்கும் என தெரியவில்லை.

இதைத் தொடர்ந்து புதிய புரொமோவில் பிக் பாஸ் வீட்டிற்குள் ஜோக்கர் ஒருவர் நுழைந்து, இது ஒண்ணும் ஆனந்தம் படமில்லை.

இது பிக் பாஸ் சீசன் 2 என கூறுகிறார். கடந்த வாரம் முழுவதும் விக்ரம் படம் போன்று ஒரே அழுகாச்சி சீனாக சென்ற பிக் பாஸ் வீட்டில் உள்ள நடிகர்களுக்கு (போட்டியாளர்கள்) இது போட்டி என்பதை ஜோக்கர் வந்து நியாபகப்படுத்த என்ன காரணம் என்பது இன்றைய நிகழ்ச்சியில் தெரியவரும்.

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …