Home / Bigg Boss Tamil Season / Bigg Boss Tamil Season 3 / கவின் ஒரு மீரா மிதுன்.. சேரனின் கருத்தால் கடுப்பான கவின் ஆர்மி
கவின்

கவின் ஒரு மீரா மிதுன்.. சேரனின் கருத்தால் கடுப்பான கவின் ஆர்மி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 121
    Shares

கவினை சேரன், மீரா மிதுன் என்று கூறியுள்ளது கவின் ஆர்மி மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ள சேரன், வெளியே இருபர்களுக்கு எது உண்மை எது பொய் என்பது தெரியாது,நான் வெளியில் வந்தவுடன் லாஸ்லியா குறித்து என்னிடம் பல பேர் சொல்லி இருக்கிறார்கள்.

அதில் நீங்கள் அந்தப் பெண் மீது உண்மையான பாசம் வைத்திருந்தார்கள். ஆனால், அந்தப் பெண் உங்களுக்கு நிறைய துரோகம் செய்திருக்கிறது உங்களுக்கு அந்த பெண் உண்மையாக இல்லை என்று பலரிடம் என்னிடம் சொன்னார்கள்.

ஆனால், உண்மையில் லாஸ்லியா என்னைப் பற்றி புறம் பேசியதை மட்டும்தான் காண்பித்துள்ளார் ஆனால் நாங்கள் இருவரும் அதை பேசி சரிசெய்து பின்னர் ஒத்துப் போய் இருந்தது எல்லாம் காண்பிக்கவில்லை அது ஏன் என்று தெரியவில்லை என்று கூறியிருந்தார்.

மேலும், கவின் மற்றும் லாஸ்லியா குறித்து பேசுகையில், இது என்னதான் விளையாட்டாக இருந்தாலும் கூட உலகில் உள்ள பல்வேறு மக்களும் இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சிக்கு ஒரு சிலவற்றிற்கு சில வரையறைகள் இருக்கிறது, இது அவர்கள் சார்ந்த விஷயம் மட்டுமல்ல பார்வையாளர்கள் சார்ந்த விஷயம் கூட தான். அது கவின் மற்றும் லாஸ்லியா கூட வாழ்க்கையில் பல பிரச்சினைகளை உருவாக்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

அதே போல பார்வையாளர்களுக்கும் பார்வையாளர்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கும், மகன்களுக்கும், மகள்களுக்கும் இது வேறு மாதிரியான தூண்டுதலை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது.
பிக் பாஸ்
இப்படி எல்லாம் பொதுநலத்தையும் சுயநலம் கருதி தான் என்னுடைய கருத்தினை நான் நிறைய இடத்தில் தூக்கி வைத்தேன். பலமுறை இது வேண்டாம் இதனை இத்தோடு நிப்பாட்டி கொள்ளுங்கள் இதனை வெளியில் சென்று பேசிக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறேன்.

நான் லாஸ்லியாவிற்கு ஒரு தந்தையாக இருந்தாலும் பொதுவான ஒரு நபராக தான் நான் அங்கு நடந்து கொண்டேன். அந்த காதல் தவறு என்றோ நீ காதலிக்க கூடாது என்று நான் சொல்லவே இல்லை. நீ பேசாத என்று நான் சொல்லவில்லை.

நேரம் தாண்டி பேசுவதும், பேசுவதற்காக அதிகநேரம் நேரத்தை எடுத்துக்கொள்வதும் உங்களுடைய விளையாட்டை பாதிக்கிறது என்று கூறினேன். மற்றுமொரு விஷயம் அவர்களது வீட்டில் இருக்கும் பெற்றோர்கள் இதை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்பதையும் நான் கூறினேன்.

ஆனால், அதையே தான் லாஸ்லியாவில் அப்பா, அம்மா வரும்போது பேசியிருந்தார்கள். எனவே, அவர்கள் என்ன நினைத்தார்களோ அதைத்தான் நான் சொன்னேன். அதுமட்டுமில்லாமல் ஆரம்பத்திலிருந்தேகவினுக்கு என்னை பார்த்தாலே பிடிக்காது. அவரைப் பொருத்தவரை அவர் ஒரு புரியாத புதிர்.
சேரன்
அவரை எப்படியும் என்னால் கணிக்கவே முடியவில்லை. எந்த வகையில் சென்றாலும் அவர் மீண்டும் மீண்டும் வேறு விதத்தில் தான் நடந்து கொள்வார். அவர் நிறைய பேசுவார், ஆனால் அவர் பேசுவது மற்றவர்களுக்குப் புரியாது. நாம் பேசுவதையும் புரிந்து கொள்ளவும் மாட்டார்.

ஆனால் , அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இவரும் ஒருவகையில் மீராமிதுன் போல தான். இவரிடம் புரிய வைக்க முயற்சி செய்வது கஷ்டம். மற்றும் ஒரு விஷயம் நாம் சொல்வதை அனைத்தும் அவரை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயமும் கிடையாது.

அது அவருடைய கேம் அதனை அவர் விளையாடுகிறார் என்று கூறியுள்ளார் பிக் பாஸ் வீட்டில் அதிகம் எடுக்கப்பட்ட நபராக இருந்து வருவது மீராமிதுன் தான் ஆனால் ஈரான் மீது உதவியுடன் ஒப்பிட்டு சேரன் பேசியுள்ள இந்த விஷயம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது இதனால் தான் கடந்த சில மணி நேரத்திற்கு முன்பாக கவின் மற்றும் சந்தியா குறித்து இனி நான் எதுவும் பேச போவதில்லை என்று சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இதையும் பாருங்க :

ராஜிவ் கொலை குறித்த சீமானின் பேச்சு ஏற்க தக்கதல்ல – பொன்.ராதாகிருஷ்ணன்

இமயமலைப் பயணம் நன்றாக இருந்தது – ரஜினிகாந்த்

சென்னைக்கு ஆபத்தா? அரபிக்கடலின் அசுரம் என்ன??

முதன்முறையாக ஆண்கள் துணையின்றி விண்வெளியில் நடந்த பெண்கள்…!

Tamil News


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 121
    Shares

Check Also

சென்னை

சென்னையில் குறைந்த காற்று மாசு! சென்னைவாசிகள் நிம்மதி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!121Shares சென்னையில் கடந்த ஒருவாரமாக அதிகரித்து காணப்பட்ட காற்று மாசு அளவு இன்று வெகுவாகக் குறைந்தது. டெல்லியைப் …