Breaking News
Home / Bigg Boss Tamil Season / Bigg Boss Tamil Season 3 / பணத்திற்காக மட்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லவில்லை… கவின் எழுதிய
பிக் பாஸ்

பணத்திற்காக மட்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லவில்லை… கவின் எழுதிய

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 4
    Shares

பிகிபாஸ் போட்டியில் இருந்து வெளியேறிய கவின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘எப்பவும் போல கூட இருங்க, எல்லோரும் நல்லா இருப்போம்’ என்று பதிவிட்டுள்ளார்

பிக்பாஸ் நிகழ்ச்சி 100-வது நாளை எட்டியுள்ளது. கடைசியாக தர்ஷன் வெளியேறிய நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் ஷெரின், சாண்டி, லாஸ்லியா, முகேன் ஆகியோர் இருக்கின்றனர்.

இறுதிப்போட்டியில் வெல்பவர்களுக்கு ரூ.50 லட்சம் கிடைக்கும். ஆனால், தற்போது ரூ.5 லட்சம் தருகிறேன் எடுத்துக்கொண்டு போட்டியில் இருந்து வெளியேறலாம் என்று பிக்பாஸ் அறிவிக்க, மறுகணமே பணத்தை பெற சம்மதித்து கவின் அங்கிருந்து வெளியேறினார்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய கவின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், எனக்கு எப்படி ஆரம்ப்பிக்கிறது என்று தெரியவில்லை.

இந்த செய்தியை பிகிபாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு அல்லது எனக்கு இருக்கும் பிரச்னைகள் முடிந்த பிறகு உங்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று நினைத்தேன்.

முதலில் நான் ஏன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

என் வாழ்நாளில் மிகவும் மோசமான காலக்கட்டத்தில் இருந்தேன். என்னுடைய முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிந்தது. என்னை நிரூபித்துகொள்ள பிகிபாஸ் நிகழ்ச்சியை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டேன்.

நான் பணத்தை கொஞ்சம் எதிர்பார்த்ததோடு சொஞ்சம் பேரும், நான் யார் என்பதையும் நீருப்பிக்கவும் நினைத்தேன். ஆனால் தற்போது சில விஷயங்களை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

எனக்கு இப்போது சில பிரச்னைகள் இருக்கிறது. இதன் காரணமாக என்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. நீங்கள் என் மீது காட்டிய அன்புக்கு என்னால் முழுதாக நன்றியை தெரிவிக்க முடியவில்லை.

நீங்கள் என் மீது காட்டிய அன்புக்கும் பதில் அன்பு கட்டுவதற்கு முன்பாக எனது குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில் நான் இருக்கிறேன்

இது எல்லாவற்றிக்கும் மேலாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு ரியாலிட்டி ஷோ. எனக்கு அது தெரிந்தாலும் சில இடங்களில் நான் எமனோஷனல் ஆகிவிட்டேன். நான் செய்த சில விஷயங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை காயப்படுத்திருந்தால் அதை நான் நியாயப்படுத்தவில்லை.

நீங்கள் என் மீது காட்டிய அன்பை நான் ஏற்றுக்கொண்டதை போல சிலர் காட்டிய வெறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். இனி வரும் காலங்களில் என் மீது காட்டிய வெறுப்பையும் அன்பாக மாற்ற முயற்சி செய்வேன்.

போட்டியில் பங்கேற்ற 17 பேருக்கும் சரியான பாடத்தை நீங்கள் கற்றுக்கொடுத்துள்ளீர்கள். இது இதோடு முடியப்போவதில்லை, நீங்கள் காட்டிய அன்புக்கு நான் கடன்பட்டுள்ளேன். உங்களை காயப்படுத்திருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்.

எப்பவும் போல கூட இருங்க, எல்லோரும் நல்லா இருப்போம் என்று பதிவிட்டுள்ளார்

வடமாநிலங்களில் கனமழையால் 130 பேர் உயிரிழப்பு


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 4
    Shares

Check Also

ஒரே பிரசவத்தில் 5

ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பெற்ற தாய் !

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!4Shares ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்பூர் நகரில் வசித்து வரும் ருஷானா என்பவருக்கு இன்று காலையில் பிரசவ …