Breaking News
Home / Bigg Boss Tamil Season / Bigg Boss Tamil Season 3 / மீராவ விடுங்க இவரு இதனால தான் பிக் பாஸ் கொண்டாடத்திற்கு வரலயாம்.

மீராவ விடுங்க இவரு இதனால தான் பிக் பாஸ் கொண்டாடத்திற்கு வரலயாம்.

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 1
    Share

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே ரசிகர்களுக்கும் மக்களுக்கும் பண்டிகை போன்று பயங்கர குஷியில் கொண்டாடி வருவார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சி என்பது 100 நாட்கள்,சுற்றி கேமராக்கள்,ஓடவும் முடியாது,ஒழியவும் முடியாது என்பதற்கேற்ப இருக்க வேண்டும்.

அதே போல் இந்த வருடம் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி சமீபத்தில் தான் திருவிழா போன்று கோலாகலமாக முடிவடைந்தது. மேலும், இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மத்த ரெண்டு சீசன்களை விட வேற லெவல் என்று சொல்லலாம்.

அந்த அளவிற்கு இந்த சீசனில் சர்ச்சைகளுக்கும், காதல்களுக்கும் பஞ்சமே இல்லை. அதுமட்டும் இல்லாமல் மற்ற சீசன்களை விட இந்த சீசன் 3க்கு மட்டும் ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. ஏன்னா,இந்த சீசன் அந்த அளவிற்கு வெறித்தனமாக இருந்தது. வழக்கம்போல பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் நம்ம உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் தான்.

மேலும்,பல்வேறு பிரச்சனைகளை தாண்டி இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் மலேசியா பாப் பாடகர் முகென் தான். இரண்டாவது இடத்தை சாண்டியும்,மூன்றாவது இடத்தை லாஸ்லியாவும் பெற்றார்கள்.

இதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து கொண்டாடி மகிழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த சில வாரங்களாகவே பிக்பாஸ் நிகழ்ச்சியின் கொண்டாட்டம் குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

அதுமட்டும் இல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சி கொண்டாட்ட புரோமோக்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் கொண்டாட்டம் வெற்றிகரமாக முடிவடைந்தது.

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் பல பேர் கலந்து கொண்டனர். ஒவ்வொருவரும் தங்களுடைய திறமைகளை நிகழ்ச்சியில் காண்பித்தார்கள். மேலும்,நிகழ்ச்சியில் முகென் பாடலும்,சாண்டியின் நகைச்சுவை நடனமும் அட்டராசிட்டியாக இருந்தது.

இப்படி ஆட்டம்,பாட்டம் என கொண்டாட்டமாக போன பிக் பாஸ் கொண்டாட்டத்தில் நடிகை ரேஷ்மா அவர்கள் கலந்து கொள்ளவில்லை. இது குறித்து ரசிகர்கள் ஏன்? நீங்கள் கலந்துகொள்ளவில்லை என பல கேள்விகள் இணையங்களில் எழுப்பி வந்தார்கள்.


அதற்கு ரேஷ்மா அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியது,நான் படபிடிப்பில் கொஞ்சம் பிஸியாக இருந்த காரணத்தினால் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை என படப்பிடிப்பில் இருக்கும்போது எடுத்த ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

எப்பவுமே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கு நிகழ்ச்சி முடிந்தவுடன் சினிமா துறையில் பல பட வாய்ப்புகள் காத்திருக்கும். அதே மாதிரிதான் இந்த முறையும் நிகழ்ந்தன.

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகையும் ஆவார். இவர் முதலில் சினிமா திரை உலகில் தொகுப்பாளினியாக தான் அறிமுகமானார்.

பின் தொலைக்காட்சி சீரியலில் நடித்தார். அதற்குப் பின்னர் இவரது தந்தை பிரசாத் பசுபுலேட்டி தயாரித்து வெளிவந்த “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றார்.

இவர் மலையாளம், தமிழ் என இரு மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்த வருடம் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்று வந்தார்.

இதையும் பாருங்க :

மோசமான நிலையில் அனுமதிக்கப்பட்ட பரவை முனியம்மா

சுஜித் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய பிக் பாஸ் பிரபலம்.

மீண்டும் உச்சத்தை தொட்ட வெங்காய விலை!

ஜெர்மன் உதவியுடன் தமிழகத்தில் மின்சார பேருந்துகள்… ரூ.1,580 கோடி முதலீடு


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 1
    Share

Check Also

கொழும்பு

கொழும்பு அரசியலில் மீண்டும் குழப்பம்! உள்நாடு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!1Share புதிய பிரதமர் , மற்றும் அமைச்சரவை நியமனங்கள், நாளை வரை தாமதமாகக் கூடும் என்று கொழும்பு …