Home / Bigg Boss Tamil Season / Bigg Boss Tamil Season 2 / பிக் பாஸ் தமிழ் 2: என்ன ஆவப்போகுதோ? குழப்பத்தில் சென்றாயன்!
பிக் பாஸ் தமிழ்

பிக் பாஸ் தமிழ் 2: என்ன ஆவப்போகுதோ? குழப்பத்தில் சென்றாயன்!

Spread the love

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சண்டை மட்டும் தான் ஹைலைட் என்று பார்த்தால், சில போட்டியாளர்கள் குழப்ப நிலையில் சுற்றுகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், சண்டையும், புறம்பேசுவதும் தான் அதிகமாக இருக்கிறது என பேச்சு பொதுவாக உள்ளது. இன்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் யாரும் சண்டைப்போட போவதில்லை போல, புறம்பேசுவதையே பிக் பாஸ் டாஸ்க்காக வைத்திருப்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இன்றைய நிகழ்ச்சி தொடர்பாக முதலில் வெளியான புரொமோ வீடியோவில், யாஷிகாவிடம் மும்தாஜ் மிக சோகமாக சில கருத்துக்களை பகிர்ந்தார். அதைத் தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள புரொமோவில், வைஷ்ணவி பொன்னம்பலம் குறித்து விஷ பாட்டில் ஜனனியிடம் குறை கூற, எனக்கு எந்த பிரச்னையும் இல்லப்பா, அவர எனக்கு ரொம்ப பிடிக்கும் என ஜனனி பதிலளிக்கிறார்.

இவர்கள் தான் வழக்கம் போல புறம்பேசுகிறார்கள் என்று பார்த்தல், சென்றாயனின் புலம்பல் அதையும் மிஞ்சிவிட்டது. கமல்ஹாசனின் நாயகன் படத்தில் வரும் ஐகானிக் டயலாக்கான ‘நீங்க நல்லவரா கெட்டவரா?’, இந்த கேள்வியை நேரடியாக குறிப்பிட்டவரிடம் கேட்க முடியாமல், டேனியிடம் கூறி சென்றாயன் புலம்புகிறார்.

எவன் நல்லவன் எவன் கெட்டவன்..அடப்போடா..எல்லாமே பொய் தான்..!!!!. இதில் சென்றாயன் யாரை குறிப்பிடுகிறார் என்பது தான் தெரியவில்லை.

Check Also

இன்றைய தினபலன்

இன்றைய ராசிப்பலன் 25 வைகாசி 2019 சனிக்கிழமை

Spread the loveஇன்றைய பஞ்சாங்கம் 25-05-2019, வைகாசி 11, சனிக்கிழமை, சஷ்டி திதி காலை 06.25 வரை பின்பு தேய்பிறை …