Breaking News
Home / Bigg Boss Tamil Season / Bigg Boss Tamil Season 3 / முதல் பதிவிலேயே மன்னிப்பு கேட்ட லாஸ்லியா!
லாஸ்லியா

முதல் பதிவிலேயே மன்னிப்பு கேட்ட லாஸ்லியா!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 25
    Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியின் பார்வையாளர்களிடமும், ரசிகர்களிடமும் மன்னிப்பு கோரியுள்ளார் லாஸ்லியா.

கடந்த ஜூன் மாதத்தில் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் அக்டோபர் 6-ம் தேதியுடன் முடிவடைந்தது. முதல் சீசனில் ஆரவ்வும், இரண்டாவது சீசனில் ரித்விகாவும் வெற்றி பெற்றிருந்த நிலையில் 3-வது சீசனில் முகின் ராவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

அவருக்கு பிக்பாஸ் டைட்டிலும் ரூ.50 லட்சத்துகான காசோலையும் வழங்கப்பட்டது. அவரைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தை சாண்டியும், மூன்றாவது இடத்தை லாஸ்லியாவும் பிடித்தனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் தற்போது சகபோட்டியாளர்களின் வீட்டுக்குச் சென்று நேரத்தை செலவிட்டு வருகின்றனர் போட்டியாளர்கள். சமீபத்தில் வனிதா வீட்டில் இயக்குநர் சேரன், லாஸ்லியா உள்ளிட்டோர் சந்தித்துக் கொண்டனர்.

அதேபோல் சாண்டி இல்லத்தில் கவினும், ஷெரின், சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் சேரன் இல்லத்துக்கும் சென்றிருந்தனர். அதற்கான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. அதேபோல் அவரது சமூகவலைதள கணக்குகளில் என்ன பதிவிடுகின்றனர் என்பதையும் நெட்டிசன்கள் கவனித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிக்பாஸ்க்கு பின் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் லாஸ்லியா, “முதலில் நான் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். எனக்கு ஆதரவளித்து அளவு கடந்த அன்பைக் கொடுத்த அனைவருக்கும் நன்றி. என்னைப் பொறுத்தவரையில் நன்றி என்பது மிகச் சிறிய வார்த்தைதான். அது அனைவருக்கும் போதுமானதாக இருக்காது.

நான் ரொம்ப ரொம்ப உங்களை நேசிக்கிறேன். எனக்கு நீங்கள் கொடுத்த ஆதரவு ஆச்சர்யமாக உள்ளது. நான் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இல்லாததற்கும், கேள்விகளுக்கு பதிலளிக்காததற்கும் மன்னிக்கவும். சத்தியமாக நிச்சயமாக உங்கள் அனைவரையும் சந்தோசப்படுத்துவேன். பெருமைப்படுத்துவேன். ஐ லவ் யூ சோ மச்” என்று கூறியுள்ளார்.

இன்றைய ராசிப்பலன் 11 ஜப்பசி 2019 வியாழக்கிழமை


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 25
    Shares

Check Also

ஒரே பிரசவத்தில் 5

ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பெற்ற தாய் !

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!25Shares ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்பூர் நகரில் வசித்து வரும் ருஷானா என்பவருக்கு இன்று காலையில் பிரசவ …