Breaking News
Home / Bigg Boss Tamil Season / Bigg Boss Tamil Season 3 / தர்ஷன் வெளியேற்றம்… அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை!
தர்ஷன்

தர்ஷன் வெளியேற்றம்… அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 88
    Shares

ஆகச்சிறந்த உழைப்பைக் கொடுத்து விளையாடிய தர்சன் இன்று வெளியேற்றப்படுகிறார் என்றால் அது வருத்தத்துக்குரியது என்று சேரன் கூறியுள்ளார்.

முதல் இரண்டு சீசன்களின் வெற்றியைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். தொலைத்தொடர்பு, இணையம் உள்ளிட்ட எந்த வெளியுலகத் தொடர்பும் இல்லாமல் 100 நாட்கள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி விதி.

முதல் சீசனில் நடிகர் ஆரவ்வும், 2-வது சீசனில் ரித்விகாவும் வெற்றி பெற்ற நிலையில் தற்போது ஒளிபரப்பாகும் 3-வது சீசனில் டைட்டிலை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் இறுதியாக கவின் பிக்பாஸ் கொடுத்த ரூ.5 லட்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டு வெளியேறினார்.
தற்போது தர்ஷன், ஷெரின், சாண்டி, லாஸ்லியா, முகென் ஆகிய 5 பேர் போட்டியாளர்களாக இருந்தனர்.

இவர்களில் ஏற்கெனவே முகென் இறுதிச் சுற்றுக்கு தேர்வாகியுள்ள நிலையில் மீதமிருக்கும் நால்வரும் வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் இருந்தனர். இதில் நேற்றைய நிகழ்ச்சியின் போது சாண்டி இறுதிச் சுற்றுக்குச் செல்லும் இரண்டாவது போட்டியாளராக அறிவிக்கப்பட்டார்.

அதேசமயம் தர்ஷன் இன்று வெளியேற்றப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை அறிந்த தர்ஷன் ஆர்மியினரும், பிக்பாஸ் பார்வையாளர்களும் அதிருப்தியடைந்துள்ளன நிலையில் உடனிருந்த சக போட்டியாளர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து கருத்து பதிவிட்டிருக்கும் இயக்குநர் சேரன், “ஆகச்சிறந்த உழைப்பைக் கொடுத்து விளையாடிய தம்பி தர்சன் இன்று வெளியேற்றப்படுகிறார் என்றால் அது வருத்தத்திற்குரியது. 100 சதவீதம் பிக்பாஸ் வின்னர் என்ற பட்டமும் பரிசும் பெற முழுத்தகுதியானவர். அவரின் முயற்சியும் முனைப்பும் அருகில் இருந்து பார்த்தவன் நான். அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.” என்று கூறியுள்ளார்.

இன்றைய ராசிப்பலன் 30 புரட்டாசி 2019 திங்கட்கிழமை


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 88
    Shares

Check Also

ஒரே பிரசவத்தில் 5

ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பெற்ற தாய் !

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!88Shares ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்பூர் நகரில் வசித்து வரும் ருஷானா என்பவருக்கு இன்று காலையில் பிரசவ …