Breaking News
Home / Bigg Boss Tamil Season / Bigg Boss Tamil Season 3 / பிக்பாஸில் தர்ஷன் வெளியேற்றப்பட்டது ஏன்?… நியாயம் கேட்கும் பார்வையாளர்கள்
இலங்கை

பிக்பாஸில் தர்ஷன் வெளியேற்றப்பட்டது ஏன்?… நியாயம் கேட்கும் பார்வையாளர்கள்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 187
    Shares

தர்ஷன் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் டைட்டிலை வெல்வார் என்று பார்வையாளர்கள் எதிர்பார்த்த நிலையில் அவர் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல் இரண்டு சீசன்களின் வெற்றியைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். தொலைத்தொடர்பு, இணையம் உள்ளிட்ட எந்த வெளியுலகத் தொடர்பும் இல்லாமல் 100 நாட்கள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி விதி.

முதல் சீசனில் நடிகர் ஆரவ்வும், 2-வது சீசனில் ரித்விகாவும் வெற்றி பெற்ற நிலையில் தற்போது ஒளிபரப்பாகும் 3-வது சீசனில் டைட்டிலை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் இறுதியாக கவின் பிக்பாஸ் கொடுத்த ரூ.5 லட்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டு வெளியேறினார்.
தற்போது தர்ஷன், ஷெரின், சாண்டி, லாஸ்லியா, முகென் ஆகிய 5 பேர் போட்டியாளர்களாக இருந்தனர்.

இவர்களில் ஏற்கெனவே முகென் இறுதிச் சுற்றுக்கு தேர்வாகியுள்ள நிலையில் மீதமிருக்கும் நால்வரும் வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் இருந்தனர். இதில் நேற்றைய நிகழ்ச்சியின் போது சாண்டி இறுதிச் சுற்றுக்குச் செல்லும் இரண்டாவது போட்டியாளராக அறிவிக்கப்பட்டார்.

அதேசமயம் தர்ஷன் இன்று வெளியேற்றப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை அறிந்த தர்ஷன் ஆர்மியினரும், பிக்பாஸ் பார்வையாளர்களும் அதிருப்தியடைந்துள்ளனர். ஆரம்பத்தில் வனிதாவை எதிர்த்து கேள்வி கேட்ட தர்ஷன் பார்வையாளர்கள் கொண்டாடும் நபராக மாறினார்.

பின்னர் பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்க்குகளில் சிறப்பாக செயல்பட்ட தர்ஷன் வெற்றிக்குத் தகுதியானவர் என்று உள்ளே இருக்கும் சகபோட்டியாளர்களே கூறினர். ஆனால் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்ற பிக்பாஸின் கூற்றுப்படி தர்ஷன் வெளியேற்றப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தர்ஷன் வெளியேற்றப்பட்டிருப்பதாக பரவிய தகவலை அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்குழுவையும், விஜய் டிவியையும் பார்வையாளர்கள் வசைபாடத் தொடங்கியுள்ளனர்.

மேலும் தர்ஷன் வெளியேற்றப்படும் நாள் தான் எங்களுக்கு கடைசி நாள். மக்களின் வின்னர் தர்ஷனுக்கு வாழ்த்துகள் என்றும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

“இது முடிவல்ல, ஆரம்பம்” தர்ஷன் ரசிகர்கள் அனைவருக்கும், எமது முகநூல் பக்கம் சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். அந்த நிகழ்ச்சியில் அவன் முதல் அடி எடுத்து வைத்த அந்த நிமிடம் அவனை யாரென்று மக்களுக்கு தெரியாத தருணங்கள், புதிய இடம், புதிய களம், புதிய மக்கள், இந்தியாவுக்குள்ளே மட்டும்தான் ஓட்டுக்கள் மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலும், இந்திய ரசிகர்கள் மனதை வென்று, அவர்கள் ஆதரவுடன் தொன்னூற்றி ஆறு நாட்கள் கடப்பது என்பது சுலபமான காரியம் அல்ல. இதுவரைக்கும் நீங்கள் காட்டிய அன்புக்கும் ஆதரவுக்கும் தர்ஷன் சார்பாக மிக்க நன்றிகள். அவனுடைய எதிர்பாரத வெளியேற்றம் எல்லோரையும் மிகவும் பாதித்தாலும், இது வெரும் தொலைக்காட்சி போட்டி நிகழ்ச்சி மட்டுமே. தர்ஷனுக்கு ரசிகர்களின் அதிகமான ஓட்டு வங்கி இருந்தும், தொலைக்காட்சி அரசியலுக்கு மத்தியில் அவனும் எத்தனை நாட்கள்தான் தாக்கு பிடிக்க முடியும்.? இது ஒன்றும் முடிவல்ல, இதுவே ஆரம்பம். அன்று அவன் சொன்னதுதான்.. “இந்த போட்டில நான் ஜெயிக்கிறேனோ இல்லயோ, இப்படி ஒருத்தன் இங்க வந்துட்டு போனான்னு மக்களுக்கு தெரிஞ்சாலே எனக்கு போதும், அதுவே எனக்கு பெரிய வெற்றிதான்” இப்படி ஒருத்தனை அடையாளம் காட்டி வாய்ப்பளித்தமைக்கு அந்த தொலைக்காட்சிக்கும் நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻

Posted by Tharshan Army on Saturday, 28 September 2019

மேடையில் லாஸ்லியாவிடம் சிக்னல் கொடுத்து கமலிடம் மாட்டிக்கொண்ட கவின்!


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 187
    Shares

Check Also

ஒரே பிரசவத்தில் 5

ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பெற்ற தாய் !

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!187Shares ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்பூர் நகரில் வசித்து வரும் ருஷானா என்பவருக்கு இன்று காலையில் பிரசவ …