Wednesday , October 17 2018
Home / Bigg Boss Tamil Season / Bigg Boss Tamil Season 2 / சர்ப்ரைஸ் விசிட் அடித்த ‘மருத்துவ முத்தம்’ நிபுணர் ஆரவ்!
சர்ப்ரைஸ்

சர்ப்ரைஸ் விசிட் அடித்த ‘மருத்துவ முத்தம்’ நிபுணர் ஆரவ்!

பிக் பாஸ் வீட்டிற்கு ‘மருத்துவ முத்தம்’ நிபுணர் ஆரவ் திடீர் விசிட் அடித்து போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக, முதல் சீசனின் டைட்டில் வின்னர் ஆரவ் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார்.

இந்த வாரம் ஏற்கனவே முதல் சீசன் போட்டியாளர்கள் சினேகன், காயத்ரி, ஆர்த்தி, சுஜா, வையாபுரி ஆகியோர் தற்போதுள்ள போட்டியாளர்களுடன் வசித்து வருகின்றனர்.

இன்றைய புதிய புரொமோவில் அட்டகாசமாக புல்லட்டில் ஹெல்மெட் போட்டு தன்னை மறைத்துக் கொண்டு உள்ளே வந்த ஆரவ் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

வந்தவுடன் யாஷிகாவை பார்த்து, பாவம் பிக் பாஸ் இவங்களுக்கு சீக்கிரம் மேக்-அப் குடுங்க என்று பரிந்துரை செய்தார்.

இது டாஸ்க் என்பதை ஆரவ் மறந்துவிட்டாரோ? ஆரவ் என்றால் நமக்கு நினைவில் இருப்பது, மருத்துவ முத்தமும், ஓவியாவும் தான்.

ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் குட்டி ஓவியா இருப்பதாக பேச்சுகள் உள்ள நிலையில், தற்போது ஆரவ் சென்றிருப்பதன் நோக்கம் மருத்துவ முத்தமாக இருக்கலாம் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Check Also

இன்றைய தினபலன்

இன்றைய தினபலன் –17 அக்டோபர் 2018 – புதன்கிழமை

இன்றைய பஞ்சாங்கம் 17-10-2018, புரட்டாசி 31, புதன்கிழமை, அஷ்டமி திதி பகல் 12.50 வரை பின்பு வளர்பிறை நவமி. உத்திராடம் …