Sunday , October 21 2018
Home / Bigg Boss Tamil Season / Bigg Boss Tamil Season 2 / ஜாலி மோடில் பிக் பாஸ் கேர்ள்ஸ்: அன்பால் கவர்ந்த ஐஸ்!
ஜாலி மோடில்

ஜாலி மோடில் பிக் பாஸ் கேர்ள்ஸ்: அன்பால் கவர்ந்த ஐஸ்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ராட்சசியாக, ராணி மகாராணியாக ஆட்டம் போட்ட ஐஸ்வர்யாவின் அன்பால் ஹவுஸ்மேட்ஸ் நெகிழ்ச்சியில் உள்ளனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், 4 பெண் போட்டியாளர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். ஒருவருக்கொருவர் அன்புடன், ஆதரவாக இருப்பது போன்ற புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

வைட் டி-ஷர்ட் ஒன்றில் ஒருவரை பற்றி மற்றொருவர் நினைக்கும் நல்ல விஷயங்களை எழுத வேண்டும். அதில் பிக் பாஸ் பைன்லிஸ்ட் ஜனனி, ரித்விகா, விஜயலக்ஷ்மி ஆகியோரை பற்றி உயர்வாக எழுதிய ஐஸ்வர்யாவின் அன்பை கண்டு அனைவரும் நெகிழ்ந்தனர். சிரிப்பழகியாக விஜயலக்ஷ்மி, டைட்டில் வின்னராக ரித்விகா என ஒரே புன்னகை கொண்டாட்டத்தில் பிக் பாஸ் கேர்ள்ஸ் திளைத்துள்ளனர்.

இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியின் ராட்சசி என்ற கருதப்பட்ட ஐஸ்வர்யா தனக்குள் இருக்கும் அன்பை வெளிப்படுத்தியிருப்பது, பிக் பாஸ் கொடுத்த ஸ்க்ரிப்ட்டில் உள்ளதா அல்லது இயல்பான அவரது குணமே இது தானா என்பது தெரியவில்லை.

Check Also

மின்சாரச் செலவைக் குறைக்க செயற்கை நிலவு திட்டம்

தெருவிளக்குகளில் மின்சாரத்தை சேமிக்க செயற்கை நிலவை உருவாக்கி சீன விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். சிச்சுவான் ((Sichuan)) மாகாணத்தில் உள்ள செங்டு …