Monday , October 22 2018
Home / Bigg Boss Tamil Season / Bigg Boss Tamil Season 2 / ஜூலி வெளியிட்ட புதிய புகைப்படம்..
ஜூலி வெளியிட்ட

ஜூலி வெளியிட்ட புதிய புகைப்படம்..

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் சர்சைக்குரிய நபராகவும், மிகவும் வெறுக்கப்ட்ட நபராகவும் இருந்தவர் ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நல்ல பெயரை எடுத்த ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெயரை டேமேஜ் செய்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் ஜூலி பல நெகடிவ் இமேஜ்களை பெற்றாலும் அதன் பின்னர் விளம்பரம், ரியாலிட்டி ஷோ, பட வாய்ப்பு என படு பிஸியாக ஆகிவிட்டார். இருப்பினும் இவரின் மீது ரசிகர்கள் இன்னும் கடுபிடில் தான் இருக்கின்றனர். இதனால் இவர் சமூக வலைத்தளத்தில் என்ன பதிவு பதிவிட்டாலும் ரசிகர்களின் கேலி கிண்டலுக்கு ஆளாகிவிடுகிறார்.

அடிக்கடி சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வரும் ஜூலி சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் மிகவும் மாடர்னான உடையில் முகம் நிறைய மேக்கப் போட்டுக்கொண்டு படு ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்திலும் சரி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்த கொண்ட ஆரம்பத்திலும் சரி பார்ப்பதற்கு மிகவும் எளிமையான பெண்ணாக இருந்த ஜூலி தற்போது அல்ட்ரா மாடர்ன் பெண்ணாக மாறி வருவதை கண்டு பலரும் இவங்களுக்கு வந்த வாழ்வு என்று தான் சளித்துக்கொண்டு வருகின்றனர்.

Check Also

இன்றைய தினபலன்

இன்றைய தினபலன் –22 அக்டோபர் 2018 – திங்கட்கிழமை

இன்றைய பஞ்சாங்கம் 22-10-2018, ஐப்பசி 05, திங்கட்கிழமை, திரியோதசி திதி இரவு 10.23 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. பூரட்டாதி …