Breaking News
Home / Bigg Boss Tamil Season / Bigg Boss Tamil Season 3 / கலக்கு கலக்குனு கலக்குறீங்க… சாண்டியை பாராட்டிய விஜய் டிவி
சாண்டி

கலக்கு கலக்குனு கலக்குறீங்க… சாண்டியை பாராட்டிய விஜய் டிவி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 2
    Shares

கலக்கு கலக்குனு கலக்குறீங்க… பிக்பாஸ் வீட்டில் சாண்டியை பாராட்டிய விஜய் டிவி பிரபலம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 102-வது நாளிற்கான முதல் புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் கலக்கு கலக்குனு கலக்குறீங்க என்று சாண்டியை விஜய் டிவி பிரபலங்கள் பாராட்டும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்திற்கு நெருங்கியுள்ளது.

மேலும் இந்த சீசனில் சாண்டி, முகேன், ஷெரின், லாஸ்லியா உள்ளிட்டோர் இறுதிப்போட்டிக்கு தேர்வாகியுள்ள நிலையில் இந்த வார இறுதியில் யார் இந்த சீசனின் வெற்றியாளர் என்று தெரிய வரும்.

இந்நிலையில் இந்த வாரம் முழுவதும் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் பல சர்ப்ரைஸ்களை வழங்கிக்கொண்டுள்ளார்.

தற்போது 102-வது நாளிற்கான முதல் புரோமோ வீடியோவை பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அதில், இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் விஜய் டிவி பிரபலங்களான பிரியங்கா, ரியோ, மாகபா ஆனந்த் மற்றும் பாலாஜி உள்ளிட்டோர் உள்ளே செல்கின்றனர்.

அப்போது சாண்டியிடம் பேசும் ரியோ கலக்கு கலக்குனு கலக்கிட்டு இருக்கீங்க என்று பாராட்டுகிறார். அவரை தொடர்ந்து சாண்டியிடம் பேசும் பிரியங்கா ஒரு நல்ல முடிவு எடுத்து இந்த வீட்டுகுள்ள வந்தீங்க இப்போ வேற லெவல்ல போயிட்டு இருக்கீங்க என்றும் பாராட்டியுள்ளார்.

ஷெரினை வச்சு செய்யும் ரியோ மற்றும் ரக்ஷன்!


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 2
    Shares

Check Also

ஒரே பிரசவத்தில் 5

ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பெற்ற தாய் !

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!2Shares ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்பூர் நகரில் வசித்து வரும் ருஷானா என்பவருக்கு இன்று காலையில் பிரசவ …