Breaking News
Home / Bigg Boss Tamil Season / Bigg Boss Tamil Season 3 / சிம்பதியைப் பார்த்து ஓட்டு போடாதீர்கள் – பிக்பாஸ் தர்ஷன் வெளியிட்ட வீடியோ!
இலங்கை

சிம்பதியைப் பார்த்து ஓட்டு போடாதீர்கள் – பிக்பாஸ் தர்ஷன் வெளியிட்ட வீடியோ!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 108
    Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 16 போட்டியாளர்களுக்கு ரசிகர்கள் தான் கிடைத்தார்கள் ஆனால் எனக்கு ஒரு குடும்பமே கிடைத்திருக்கிறது என்று தர்ஷன் கூறியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் இந்தமுறை தர்ஷனுக்குத் தான் என்று பார்வையாளர்களும் சகபோட்டியாளர்களும் நினைத்திருந்த நிலையில் கடந்த வாரம் அவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அவர் வெளியேற்றப்பட்டது பார்வையாளர்கள் மத்தியிலும், சக போட்டியாளர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வந்த பின்னர் பார்வையாளர்களுக்கு நன்றி தெரிவித்து தர்ஷன் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, “தாமதாக உங்களிடம் பேசுவதற்கு முதலில் என்னை மன்னித்து விடுங்கள். உங்களை நண்பர்கள் என்று சொல்வதா ரசிகர்கள் என்று சொல்வதா எனக்கு தெரிந்து ஃபேமிலி என்பதுதான் சரியான வார்த்தை.

அவ்வளவு அன்பும் ஆதரவும் கொடுத்திருக்கிறீர்கள். சில விஷயங்களை கனவு காணலாம். கனவையும் தாண்டி நடந்த இந்த விஷயத்தை நன்றி என்ற ஒரு வார்த்தைக்குள் அடக்க முடியாது.

பொதுவாகவே ஒரு விஷயத்தைச் சொல்லும் முன் யோசிப்பேன். ஆனால் இதை நான் பெருமையாகவும், கர்வத்துடனும் சொல்வேன். என்னவென்றால் 16 போட்டியாளர்கள் இருந்தார்கள். அவர்களுக்கென ரசிகர்கள் இருந்தார்கள். ஆனால் எனக்கு ஒரு ஃபேமிலி கிடைத்திருக்கிறது.

எல்லோரும் என்னிடம் வெற்றிபெறாததற்காக ஃபீல் பண்ணுகிறீர்களா என்று கேட்கிறார்கள். நான் ஃபீல் பண்ணவில்லை. இப்படி ஒரு அன்பும் ஆதரவும் மற்றவர்களுக்கு கிடைக்கவில்லை. அந்த வகையில் நான் வெற்றி பெற்றுவிட்டேன். நன்றி. என்னால் வார்த்தைகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரியவில்லை.

அங்கிருக்கும் மற்ற போட்டியாளர்களுக்கு வாக்களியுங்கள். யாரையும் குறிப்பிட்டு இவர்களுக்கு மட்டும் வாக்களியுங்கள் என்று சொல்லமாட்டேன். யார் தகுதியானவர் என்பது உங்களுக்குத் தெரியும். சிம்பதியைப் பார்த்து வாக்களிக்காதீர்கள். கடின உழைப்பு மற்றும் தகுதியானவர்களைப் பார்த்து வாக்களியுங்கள்” என்று கூறியுள்ளார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாள் இன்று


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 108
    Shares

Check Also

ஒரே பிரசவத்தில் 5

ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பெற்ற தாய் !

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!108Shares ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்பூர் நகரில் வசித்து வரும் ருஷானா என்பவருக்கு இன்று காலையில் பிரசவ …