Sunday , July 22 2018
Breaking News
Home / TamilFood / உடல் சூட்டை தணிக்கும் அகத்திக்கீரை சொதி

உடல் சூட்டை தணிக்கும் அகத்திக்கீரை சொதி

தேவையான பொருட்கள் :
* அகத்திக்கீரை – ஒரு சிறு கட்டு
* வெங்காயம் – பாதி
* பச்சை மிளகாய் – 2
* உப்பு – அளவாக
* மஞ்சள் தூள் – ஒரு பெரிய பிஞ்ச்
* கறிவேப்பிலை – சிறிதளவு
* தேங்காய்ப்பால் (தலைப்பால்) – ஒரு கப்
* தேங்காய்ப்பால் (தண்ணீர்ப்பால்) – 2 கப்

செய்முறை :
* தேவையான அனைத்தையும் தயாராக வைக்கவும்.

* பச்சை மிளகாய், வெங்காயத்தை நீளமாக அரிந்து வைக்கவும்.

* அரிந்து வைத்த மிளகாய், வெங்காயம், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர்ப்பாலில் அவியவிடவும்.

* வெங்காயம் மற்றும் மிளகாயின் நிறம் மாற ஆரம்பித்ததும் தலைப்பால் சேர்க்கவும். கொதிக்க ஆரம்பித்ததும் திரிய விடாமல், கரண்டியால் ஆற்றவேண்டும்.

* ஆற்றிக் கொண்டே கீரையையும், கறிவேப்பிலையையும் காம்போடு சொதியில் சேர்த்து அவிந்ததும் இறக்கவும். அதிக நேரம் அவியவிட வேண்டாம்.

* சுடுசாதம், இடியப்பத்திற்கு சூப்பராக இருக்கும். சுலபத்தில் கையால் உருவ வராது. காம்பை பிடித்துக்கொண்டு தான் இலையைச் சாப்பிட வேண்டும். சுவை அருமையாக இருக்கும். காம்போடு போடுவதால் கசப்பே இராது. சொதியில் கீரையின் சுவை இறங்கி இருக்கும். ஆனால், அது கூட கசக்காது; அருமையாக இருக்கும்.

Check Also

பூண்டு ஊறுகாய்!!

தேவையான பொருள்கள்: பூண்டு – 1/4 கிலோ எலுமிச்சை சாறு -150 மில்லி நல்லெண்ணெய் – 150 மில்லி உப்பு …