Breaking News
பெண்களின்

​உடற்பயிற்சி கூடத்தில் பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்!

சென்னை வில்லிவாக்கத்தில் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி செய்த 15 வயது சிறுவன் மீது இரும்பு உபகரணம் விழுந்ததால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

வில்லிவாக்கத்தைச் சேர்ந்த மின்வாரிய ஊழியரான சுரேஷ் என்பவரது மகன் மோகன் 10-ஆம் வகுப்பு முடித்துள்ளார். கோடை விடுமுறையில் வீட்டின் அருகேயுள்ள தனியார் உடற்பயிற்சி கூடத்தில் கடந்த சில வாரங்களாக மோகன் பயிற்சி மேற்கொண்டுவந்தார். இந்த நிலையில், வழக்கம்போல பயிற்சி மேற்கொண்ட மோகனின் தலை மீது எதிர்பாராதவிதமாக இரும்பு உபகரணம் விழுந்ததாக கூறப்படுகிறது.

சுய நினைவை இழந்த அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுசென்றபோது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இது குறித்து வில்லிவாக்கம் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.

வெள்ளத்தால் உருக்குலைந்தது சீனாவின் கட்டமைப்பு..!

About அருள்

Check Also

விஜயகாந்திற்கு கொரோனா உறுதி

விஜயகாந்திற்கு கொரோனா உறுதி

விஜயகாந்திற்கு கொரோனா உறுதி தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே உடல்நிலை சரியில்லாத நிலையில், கொரோனா …