Breaking News

சாஜாவில் 45 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் பாரிய தீ விபத்து

சாஜாவில் எரிந்து கொண்டு இருக்கும் குடியிருப்பு

ஷார்ஜாவின் அல் நஹ்தா பகுதியில் அமைந்துள்ள 42 அடி உயரமான குடியிருப்பு கட்டிடமான Abbco Towerயில் பாரிய தீ விபத்து கடந்த இரவு ஏற்பட்டுள்ளதாக அமீரகத்தின் செய்திகள் தெரிவிக்கின்றன.

அமீரக நேரப்பட்டி இரவு 9.04க்கு தீ விடித்து 10ஆவது மாடியில் ஏற்பட்டுள்ளது. 2006ம் ஆண்டு கட்டப்பட்ட Abbco Towerயில் பாக்கிங் வசதியுடன் சேர்த்து 45 மாடிகளைக் கொண்டுள்ளது. 36 மாடிகள் குடியிருப்புக்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு மாடியிலும் 12 குடியிருப்புக்கள் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் முழுமையான சேத விபரங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை. என்றாலும் 9 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக கல்ப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அங்கு குடியிருந்தவர்கள் பாதுகாப்பான முறையில் வெளியேற்றப்பட்டனர்.

மேலும் அருகாமையிலிருந்த குடியிருப்புக் கட்டிடங்களில் இருந்தவர்களும் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய அரபு ராட்சியத்தின் சார்ஜாவில், பெரும் தொடர்மாடி குடியிருப்பு ஒன்று சற்று முன், தீ பிடித்து எரிய ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.

இதில் இருந்து பாதுகாப்பாக 300 பேர் வரை மீட்க்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகிக் கொண்டு இருக்கும் அதே நேரம்.

உள்ளே பலர் சிக்கி இருக்கலாம் என்ற செய்திகளும் வெளியாகியுள்ளது.

குறித்த தொடர்மாடிக் குடியிருப்பில் சில தமிழ் குடும்பங்களும் வசித்து வருகின்றனர் என்பது குறிபிடதக்கது.

இந்தியர்களை 64 விமானங்கள் மூலம் மீட்க நடவடிக்கைஇந்தியர்களை 64 விமானங்கள் மூலம் மீட்க நடவடிக்கை

உலக அளவிலான கொரோனா பாதிப்பு: 36 லட்சத்தை தாண்டியதுஉலக அளவிலான கொரோனா பாதிப்பு: 36 லட்சத்தை தாண்டியது

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …