பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து - விபத்தில் 7 பேர் பலி

பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து – விபத்தில் 7 பேர் பலி

பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து – விபத்தில் 7 பேர் பலி

இமாச்சலப் பிரதேசத்தில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இமாச்சலப் பிரதேசம் மாநிலம் சோலான் மாவட்டத்தில் பேருந்து ஒன்று பயணிகளோடு சோலான்-ராஜ்கார் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தது. பேருந்தில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் சென்று கொண்டிருந்தனர்.

நயி-நேட்டி என்ற இடத்தில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் சிக்கி பேருந்தில் பயணித்த 7 பேர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர். விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். போலீஸார் விபத்து குறித்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

 

Visit Our Sites:

Tamilnewsstar.com

Tamilaruvi.news

Tamilaruvi.tv

Tamilaruvimedia.com

Tamil24news7.com

Check Also

இந்திய கடற்படைப் கப்பல்கள்

இந்தியர்களை மீட்க 14 இந்திய கடற்படைப் கப்பல்கள் தயார்

இந்தியர்களை மீட்க 14 இந்திய கடற்படைப் கப்பல்கள் தயார் இந்திய கடற்படையின் துணை தளபதி வைஸ் அட்மிரல் அஷோக் குமார் …