தம்பலகாமத்தில் கோர விபத்து! மூவர் மரணம்!! – 60 பேர் காயம்

தம்பலகாமத்தில் கோர விபத்து! மூவர் மரணம்!! – 60 பேர் காயம்

திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பகுதியில் இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் 60 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

தம்பலகாமம் 99ஆம் கட்டைப் பகுதியில் இன்று அதிகாலை 5 மணியளவில் இந்தக் கோர விபத்து இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து வந்த பயணிகளை இறக்கிக்கொண்டிருந்த இ.போ.ச. பஸ்ஸை தனியார் சொகுசு பஸ் மோதித் தள்ளியுள்ளது.

தனியார் சொகுசு பஸ்ஸின் சாரதி தூக்கத்தில் பஸ்ஸை செலுத்தி வந்ததாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என விசாரணைகளை மேற்கொண்டுவரும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் தனியார் சொகுசு பஸ்ஸின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்தவர்கள் தம்பலகாமம் மற்றும் கந்தளாய் வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

தனியார் சொகுசு பஸ்ஸின் சாரதி உட்பட உயிரிழந்த மூவரின் சடலங்களும் தம்பலகாமம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு விமலும் பொறுப்பே! – சரவணபவன் பதிலடி

தம்பலகாமத்தில் கோர விபத்து! மூவர் மரணம்!! – 60 பேர் காயம்

Tamil News
Tamilnadu News
World Tamil News

About விடுதலை

Check Also

கல்வி அமைச்சின் விசேட தீர்மானம்

கல்வி அமைச்சின் விசேட தீர்மானம்

கல்வி அமைச்சின் விசேட தீர்மானம் நாட்டில் உள்ள பிரதான 06 பொறியியல் பீடங்களில் இந்த வருடம் மேலதிகமாக 405 மாணவர்களை …