Breaking News
கருவில் உள்ள குழந்தையை கொரோனா தாக்கும் - ஆய்வில் தகவல்

கருவில் உள்ள குழந்தையை கொரோனா தாக்கும் – ஆய்வில் தகவல்

கருவில் உள்ள குழந்தையை கொரோனா தாக்கும் – ஆய்வில் தகவல்

காய்ச்சல், சளி, மூச்சுத்திணறல், வறட்டு இருமல் ஆகியவை இருந்தாலே கொரோனா வைரஸ் பரிசோதனை அவசியம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது புதிய ஆறு அறிகுறிகள் இருந்தாலும் பரிசோதனை தேவை என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தலைவலி,வாந்தி, வயிற்றுப் போக்கு வந்தாலும் கொரோனா பரிசோதனை எடுப்பது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நோய்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு பிரிவு கொரோனா அறிகுறிகள் குறித்த எச்சரிக்கைகளை அவ்வபோது அறிவித்து வருகிறது.

கெண்டைக்கால் பகுதியில் ஏற்படும் வலி, வயிற்றுவலி ஆகியவையும் கொரோனாவின் அறிகுறிகளாக மாறியுள்ளன.

கொரோனா வைரஸ் மனிதனின் எந்ததெந்த உறுப்புகளை தாக்கும், எப்படி தாக்கும் என்பது பற்றி தினமும் ஒரு ஆய்வு முடிவு வெளியாகிக் கொண்டிருக்கிறது.

இது, மக்களை ஒருவகையில் குழப்புகிறது. மறுபக்கம், அதிர்ச்சி அடைய வைக்கிறது. இந்த ஆய்வு வரிசையில், கர்ப்பத்தில் இருக்கும் சிசுவையும் கொரோனா தாக்கும் வாய்ப்புகள் உள்ளதாக புதிய ஆய்வு முடிவு வெளியிடப்பட்டு இருக்கிறது.

அந்த ஆய்வு முடிவில் இடம் பெற்றுள்ள தகவல்கள்: பெரும்பாலான வைரஸ்கள் நச்சுக்கொடி மூலம் கர்ப்பிணி பெண்ணின் கருப்பைக்கு சென்று கருவை பாதிக்கின்றன.

அதேபோல், கொரோனா வைரஸ் கர்ப்பிணி பெண்கள் மூலம் அவர்களின் கர்ப்பத்தில் உள்ள குழந்தையை பாதிப்பதற்கான வாய்ப்புகள் தற்போது அதிகரித்துள்ளது.

சமீபத்தில், இத்தாலியில் கொரோனா பாதித்த 31 கர்ப்பிணி பெண்கள் கடந்த மார்ச், ஏப்ரலில் குழந்தை பெற்றனர். இதில், அவர்களின் தொப்புள் கொடி ரத்தம், நஞ்சுக்கொடி, தாய்ப்பாலில் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஒரு குழந்தைக்கு மட்டும் தொப்புள் கொடி ரத்தம், நஞ்சுக் கொடியில் வைரஸ் காணப்பட்டது. மற்றொரு குழந்தைக்கு எதிர்ப்பு ஆற்றல் இருந்ததால், வைரசால் நஞ்சுக்கொடியை கடந்து செல்ல முடியவில்ல.

பிரான்சில் நடத்தப்பட்ட ஆய்வில், கருவில் உள்ள குழந்தையை கொரோனா தாக்கும் என்பது உறுதியாகி உள்ளது. இதுவரை, கர்ப்பத்தின், கடைசி காலத்தில் வைரஸ் பாதித்த பெண்களிடம் தான் அதிகளவில் ஆய்வுகள் நடந்துள்ளது.

அதனால், கர்ப்பத்தின் ஆரம்ப நிலையில் கொரோனா பாதித்த பெண்களிடம் அதிக ஆய்வுகள் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பெரும்பான்மையினை பெற்றுக் கொள்வதே நோக்கம் – சஜித் குற்றச்சாட்டு

About அருள்

Check Also

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.33 கோடி

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.33 கோடி

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.33 கோடி சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா …