Breaking News

கனடாவில் ஈழத்தமிழ் மாணவன் சுட்டுக்கொலை

ஈழத்தமிழ் மாணவன் ஒருவன் கனடாவில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (27) நள்ளிரவு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தமிழர்கள் செறிந்து வாழும் ஸ்காபுரோ என்ற இடத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யோர்க் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும்வினோஜன் சுதேசன் (வயது-21) என்ற மாணவனே சுட்டுக் கொல்லப்பட்டவராவார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் டுநளவநச டீ. Pநயசளழn கல்லூரிக்கு அருகாமையில் இவரது உடல் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டது.

உணவகம் ஒன்றில் பணியாற்றிய இவர் அங்கு தனது இரவுக் கடமையை முடித்து விட்டு உடற்பயிற்சிக் கூடத்துக்குச் சென்றார். அங்கும் பயிற்சியை நிறைவுசெய்துவிட்ட வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோதே சுட்டுக்கொல்லப்பட்டார் எனத் தெரியவருகின்றது.

அவர் அணிந்திருந்த நகைகள் மற்றும் அவரது பொருட்கள் என்பவற்றைக் கொள்ளையடித்த பின்னரே அவர் சுட்டுக்கொல்லப்பட்டார் எனவும் விசாரணைகளில் தெரியவந்தது.

இக்கொலை தொடர்பாக ரொரண்டோ காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அருகில் இருந்த சி.சி.ரி.வி கமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைதுசெய்ய முடியும் என காவல்துறையினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …