முக்கிய செய்திகள்தமிழ்நாடு செய்திகள்

அமெரிக்காவில் புதுப்பொலிவுடன் கேப்டன்

தேமுதிக தலைவரும் நடிகருமான கேப்டன் விஜயகாந்த் உடல் சிகிச்சைக்காக கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்கா சென்றிருந்தார்.

அவருடன் அவருடைய மனைவி பிரேமலதா மகன் சண்முக பாண்டியன் ஆகியோர் சென்றிருந்தனர்.

இந்த நிலையில் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த் குறித்து சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய வதந்திகள் வெளிவந்தது.

ஆனால் இந்த வதந்திகளை பொய்யாக்கும் விதத்தில் அமெரிக்காவில் விஜயகாந்த் புத்துணர்ச்சியுடன் புது உற்சாகத்துடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படங்களை பார்க்கும்போது ‘விரைவில் விஜயகாந்த் கம்பீரக்குரலுடன் திரும்பி வருவார்’ என்று அவரது மூத்த மகன் விஜய்பிரபாகரன் கூறியது முற்றிலும் உண்மையே என்பது உறுதியாகியுள்ளது.

Tags
Show More
Back to top button
You cannot copy content of this page
Close