Friday , January 18 2019
Home / த‌மிழக‌ம் / சர்கார் படத்திற்கு எதிராக வழக்கு பாயும்:சிவி சண்முகம்
சர்கார் பட கதை

சர்கார் படத்திற்கு எதிராக வழக்கு பாயும்:சிவி சண்முகம்

சர்கார் படத்தின் தயாரிப்பாளர், நடிகர் மற்றும் படத்தை திரையிட்ட திரையரங்குகள் மீது வழக்கு தொடரப்படும் என்று அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் உலகம் முழுவதும் 3000 திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள சர்கார் திரைப்படம், முழுக்க முழுக்க அரசியல் பேசும் படமாக உருவாகியுள்ளது.

இதில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ.கருப்பையா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார்.

இதில் வரலட்சுமியின் கதாபாத்திரத்தின் பெயர் கோமலவள்ளி. பெற்ற தந்தைக்கே விஷம் வைத்துக் கொள்ளும் அளவிற்கு கோமலவள்ளியின் கதாப்பாத்திரம் கொடூரமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, கோமளவள்ளி என்ற பெயர் ஜெயலலிதாவின் இயற்பெயர் என்பதால் அதிமுகவிற்குள் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அதேபோல், அரசின் இலவச திட்டங்கள் குறித்தும் சர்கார் திரைப்படத்தில் விமர்சிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சட்டத்துறை அமைச்சர் சிவி.சண்முகம், “சர்கார் படத்தில் அரசியல் நோக்கத்திற்காக சில காட்சிகள் இருப்பதால் ஆலோசனைக்கு பிறகு பட தயாரிப்பாளர், நடிகர் மீது வழக்கு பதியப்படும்.

கூடவே, அப்படத்தை திரையிட்ட திரையரங்குகள் மீதும் வழக்கு பதியப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

Check Also

புதிய அரசமைப்பு முயற்சியிலிருந்து பின்வாங்கமாட்டோம்!

“தடைகள் வரும்போது அஞ்சமாட்டோம். அதைத் தகர்த்து அனைவரினதும் மனதையும் வெல்வோம். புதிய அரசமைப்பை உருவாக்கும் பணிகளிலிருந்து நாம் ஒருபோதும் பின்வாங்கமாட்டோம். …