Breaking News
கொரோனா வைரசுக்கு

கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 38 ஆயிரத்தை நெருங்கியது

கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 38 ஆயிரத்தை நெருங்கியது

உலக அளவில் கொரோனா வைரசுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் பலியாகி வருகிறார்கள். அந்த வகையில் நேற்று ஒரே நாளில் சுமார் 3,000 பேர் பலியாகினர். இதில், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் பலியானவர்கள் மட்டும் பாதிக்கும் மேற்பட்டோர் ஆவர்.

இதன் மூலம் உலக அளவில் கொரோனா வைரசுக்குப் பலியானோர் எண்ணிக்கை 38 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி 37,815 பேரை கொரோனா வைரஸ் பலியாக்கியிருக்கிறது. அதே போல் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தைக் கடந்துள்ளது. சுமார் 1, 65 ஆயிரம் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.

உலக அளவில் இத்தாலியில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. ஸ்பெயின் நாட்டில் 7ஆயிரத்து 500-க்கும் அதிகமானோர் பலியானார்கள். 88 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,64 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,165- ஆக உள்ளது. வைரசின் பிறப்பிடமான சீனாவில் புதிதாக 79 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

ஈரானில் 2 ஆயிரத்து 700-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 41 ஆயிரத்தைத் தாண்டியிருக்கிறது. பிரான்ஸ் நாட்டில் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

44 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். மொத்த உயிர்ப்பலியில் ஐரோப்பா கண்டத்தில் மட்டும் மூன்றில் இரண்டு பங்கு உயிர்ப்பலி ஏற்பட்டுள்ளது.

Today rasi palan 31.03.2020 Tuesday – இன்றைய ராசிப்பலன் 31 மார்ச் 2020 செவ்வாய்க்கிழமை

சீனாவில் புதிதாக 31 பேருக்கு கொரோனா பாதிப்பு

இன்னும் 2 வாரங்களுக்கு கொரோனா பயங்கரமாக இருக்கும்

Tamil News
Tamilnadu News
World Tamil News

About அருள்

Check Also

தாலிபனுடன் ஏற்படுத்திய சமரச ஒப்பந்தத்தை ரத்து செய்யுமா அமெரிக்கா?

தாலிபனுடன் ஏற்படுத்திய சமரச ஒப்பந்தத்தை ரத்து செய்யுமா அமெரிக்கா?

தாலிபனுடன் ஏற்படுத்திய சமரச ஒப்பந்தத்தை ரத்து செய்யுமா அமெரிக்கா? தாலிபனுடன் அமெரிக்கா செய்துக் கொண்ட சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை …