விளையாட்டு செய்திகள்

உலக கோப்பை கால்பந்து: முடிவுகளை கணிக்கும் பூனை!

21 வது உலக கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷியாவில் நாளை துவங்குகிறது. ஜூலை 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. போட்டியில் மோத்தம் 32 அணிகள் பங்கேற்கவுள்ளன.

இந்நிலையில், உலக கோப்பை போட்டியின் முடிவுகள் எப்படி இருக்கும் என்று முன் கூட்டியே வெளியாகும் கணிப்புகளில் கால்பந்து ரசிகர்கல் ஆர்வமாக உள்ளனர்.

கடந்த 2010 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலக கோப்பை தொடரின் போது முடிவுகளை கணிப்பதில் பால் என்ற ஆக்டோபஸ் நாயகனாக விளங்கியது.

ஜெர்மனி அணி மோதிய அனைத்து ஆட்டங்களையும் துல்லியமாக கணித்த ஆக்டோபஸ், ஸ்பெயின் அணி கோப்பையை வெல்லும் என்று சுட்டிக்காட்டிய ஆருடமும் அப்படியே பலித்தது.

எனவே, இந்த முறை ஆட்டத்தின் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை கணிக்க அசிலிஷ் என்ற பூனை தயார்படுத்தப்பட்டுள்ளதாம். பூனையின் கணிப்பு ஆக்டோபஸை போன்று இருக்கிறதா என பொருத்திருந்து பார்ப்போம்.

Tags
Show More
Back to top button
You cannot copy content of this page
Close