சஜித்துடன் இணைய முயற்சிக்கும் தலைமைகள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் தேர்தல் கூட்டணியை உருவாக்குவதற்கு குறிப்பிட்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கமைய, டலஸ் அழகப்பெரும , தயாசிறி ஜயசேகர மற்றும் ரொஷன் ரணசிங்க தலைமையிலான அரசியல் குழுக்களே குறித்த முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டு பின்னர், அதிலிருந்து விலகி எதிர்க்கட்சிகளுடன் இணைந்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More »இலங்கைக்கு 3655 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் நிவாரணம்
வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பின் கீழ் இலங்கைக்கு 3655 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் நிவாரணம் கிடைக்கும் என கருதப்படுவதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார். அதன்போது, வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையை ஈடுசெய்ய சர்வதேச நாணய நிதியம் 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதகவும், உலக வங்கி 400 மில்லியன் அமெரிக்க டொலர்களையும், ஆசிய அபிவிருத்தி …
Read More »அரச ஊழியர்களின் சம்பள உயர்வு, 2025 வரவு செலவு திட்டத்தில் தீர்வு
அரச ஊழியர்களின் சம்பள உயர்வு, 2025 வரவு செலவு திட்டத்தில் தீர்வு 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரச துறையில் நிலவும் சம்பள முரண்பாடுகளை தீர்ப்பதற்கு மேலதிக நிதி ஆதாரங்களை ஒதுக்குவதற்கு அரசாங்கத்தினால் தற்போது முடியவில்லை என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் (PMC) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். இதனடிப்படையில், அரசாங்க திணைக்களங்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்டப்பூர்வ அமைப்புகளுக்குள் உள்ள முரண்பாடுகள் உட்பட சம்பளம் தொடர்பான பிரச்சினைகளுக்கு …
Read More »SpaceX இன் Starlink இணைய சேவை
செயற்கைக்கோள் இணைய சேவைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒப்புதல் அளித்ததை அடுத்து SpaceX இன் ஸ்டார்லிங்க் இலங்கையில் நிறுவலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஸ்டார்லிங்க் இணையத்தை வார இறுதியில் தொடங்குவதற்கு ஜனாதிபதி விக்கிரமசிங்க ஒப்புதல் அளித்துள்ளார். அவர் சமூக ஊடகங்களில் திட்டத்தை அறிவித்தார் மற்றும் இலங்கையில் Starlink இன் சாத்தியக்கூறுகள் பற்றிய கூடுதல் விவரங்களை வழங்கியுள்ளார். மேலும் இரண்டு வார பொது ஆலோசனைக் காலத்தின் பின்னர் Starlink இணையம் இலங்கையில் தொடங்கப்படலாம் எனவும் கூறியுள்ளார்.
Read More »ஜனாதிபதியின் பதவிக்கால நீடிப்பு சத்தியமா?
ஜனாதிபதியின் பதவிக்கால நீடிப்பு சத்தியமா? ஜனாதிபதி தேர்தல் திட்டமிட்டபடி நடத்தப்படும் என்று கூறப்பட்ட போதிலும் இன்னமும் அரசியலமைப்பில் உள்ள விதிகளை பயன்படுத்தி ஜனாதிபதியின் பதவிக்காலம் மற்றும் நாடாளுமன்ற காலத்தை நீடிக்க அரசாங்கம் முயற்சிக்கும் என்ற ஊகங்கள் குறையவில்லை. முன்னதாக, பொது வாக்கெடுப்பு மூலம் மக்களின் ஒப்புதலுடன் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களை இரண்டு ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார கருத்துரைத்திருந்தார். எனினும், இந்த கருத்து சொந்த கட்சிக்குள்ளும் எதிர்க்கட்சி தரப்பிலும் கடும் விமர்சனங்களை …
Read More »இந்திய பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்தார்
மூன்றாவது முறையாகவும் இந்திய பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்தார் தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராகப் பதவியேற்ற நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், இந்திய-இலங்கை உறவுகளை வலுவாக தொடர இருநாட்டுத் தலைவர்கள் மீண்டும் உறுதியளித்தனர். நரேந்திர மோடியின் பதவியேற்பு விழா நேற்று (09) பிற்பகல் புதுடெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் பிரமாண்டமான முறையில் இடம்பெற்றது. நரேந்திர மோடியின் விசேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் இந்நிகழ்வில் இணைந்துகொண்டார். பங்களாதேஷ் பிரதமர் ஷேக் …
Read More »ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரண்டு வருடங்கள் நீடித்தால்……. பா.உ சி.வி.விக்னேஸ்வரன்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த இரண்டு வருடங்கள் நீடித்தால்……. பா.உ சி.வி.விக்னேஸ்வரன் தற்போதைய அதிபர் முறை மாற்றப்பட்டால் நாட்டின் பொருளாதார பிரச்சினைகள் அதிகரிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், தற்பொழுது இருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த இரண்டு வருடங்கள் நீடித்தால் நல்லது எனவும் தெரிவித்துள்ளார்.
Read More »உலக சுகாதார ஸ்தாபனத்தினால் இலங்கைக்கு விருது
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் (WHO) வழங்கப்பட்ட 2024ஆம் ஆண்டிற்கான உலக புகைத்தல் தடுப்பு தினத்திற்கான விருது இலங்கைக்கு கிடைத்துள்ளது. சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவினால் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்திற்கு குறித்த விருது வழங்கி வைக்கப்பட்டது. விகாரமஹாதேவி பூங்காவில் நேற்று (07) நடைபெற்ற உலக புகையிலை தடுப்பு தினத்தை கொண்டாடும் தேசிய நிகழ்விலேயே இந்த விருது வழங்கி வைக்கப்பட்டது.
Read More »போதைப்பொருள் மாத்திரைகளை உட்கொண்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
பாடசாலையில் திடீரென மயங்கி விழுந்த இரண்டு மாணவர்கள் பதியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அம்பாறை, பதியத்தலாவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த மாணவர்கள் இருவரும் போதைப்பொருள் அடங்கிய இரண்டு மாத்திரைகளை உட்கொண்ட காரணத்தினால் திடீரென மயங்கி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவத்தில் பாடசாலை ஒன்றில் முதலாம் தரத்தில் கல்வி கற்கும் ஆறு வயது மாணவனும், ஏழாம் ஆண்டில் கல்வி கற்கும் பதினொரு வயது மாணவனுமே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த இரண்டு மாணவர்களுக்கும் பாடசாலைக்கு வரும் போது போதைப்பொருள் விற்பனை செய்த சந்தேகத்தின் பேரில் இருபத்தொரு வயதுடைய இளைஞன் ஒருவர் …
Read More »விடுதலை புலிகளின் முகாம் பகுதியில் புதையல் தேடிய காவல்துறை அதிகாரி, ஆசிரியர் உட்பட ஐவர் கைது
கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளின் அன்பு முகாம் இருந்த பகுதியில் புதையல் தேடிய காவல்துறை அதிகாரி, ஆசிரியர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை விசேட அதிரடிப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகநபர்கள் நேற்று (7) இரவு 10.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தின் இராமநாதபுரம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட அழகாபுரி பகுதியில் விடுதலைப்புலிகளால் அன்பு முகாம் அமைக்கப்பட்டிருந்த பகுதியில் ஸ்கானர் மூலம் புதையல் தேட முயற்சித்த குற்றச்சாட்டிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது. இதன்போது, 2 இலத்திரனியல் ஸ்கானர் இயந்திரங்கள் மீட்கப்பட்டுள்ளதாக …
Read More »