Friday , October 19 2018
Home / Headlines News (page 104)

Headlines News

Headlines News

காங்கிரஸ் கட்சிக்கு 51 உறுப்பினர்களுடன் புதிய காரிய கமிட்டி – ராகுல் அறிவிப்பு

51 உறுப்பினர்களுடன் புதிதாக இன்று உருவாக்கப்பட்டுள்ள அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டியின் முதல் கூட்டம் வரும் 22-ம் தேதி நடைபெறுகிறது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் தொடர்பாக ஆலோசித்து தீர்மானிக்கும் செயற்குழுபோல் இயங்கும் மத்திய காரிய கமிட்டிக்கு தேசிய அளவில் மூத்த தலைவர்கள் நியமிக்கப்படுவது வழக்கம். காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக பொறுப்பேற்ற பின்னர், மத்திய காரிய கமிட்டியை ராகுல் காந்தி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் …

Read More »

பாராளுமன்றம் சுமுகமாக இயங்க அனைத்து கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டும் – மோடி

பாராளுமன்றம் சுமுகமாக இயங்க அனைத்து கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டும் – மோடி நாளை தொடங்கும் பாராளுமன்ற கூட்டத்தொடர் சுமுகமாக இயங்க அனைத்து கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 18-ம் தேதி தொடங்கவுள்ளது. ஆகஸ்ட் 10-ம் தேதிவரை நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் 46 மசோதாக்கள் நிறைவேற வேண்டியுள்ளது. 18 அமர்வுகளாக மொத்தம் 24 நாட்கள் இந்த கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. கடந்த பாராளுமன்ற …

Read More »

நம்பிக்கையில்லா தீர்மான அச்சுறுத்தல் – தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் ஆலோசனை

நம்பிக்கையில்லா தீர்மான அச்சுறுத்தல் – தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் ஆலோசனை பாராளுமன்றத்தில் தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளதால், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் ஆலோசனை நடத்தியுள்ளன பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ளது. இன்னும், மூன்று கூட்டத்தொடர்கள் மட்டுமே மீதம் இருப்பதால் நிலுவையில் உள்ள மசோதாக்களை நிறைவேற்ற அரசு வேகம் காட்டி வருகிறது. இன்று நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில், …

Read More »

ரஷிய உளவாளியாக நடித்த பெண் அமெரிக்காவில் கைது

ரஷியா நாட்டை சேர்ந்தவர் மரியா புட்டினா(29). அமெரிக்காவுக்கு வந்து அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த மரியா, ரஷியா நாட்டின் துப்பாக்கி வைத்திருக்கும் உரிமைகளுக்காக போராடும் அமைப்பின் நிறுவனராகவும் உள்ளார். இந்நிலையில், வாஷிங்டன் மற்றும் நியூயார்க் நகரில் அமெரிக்க அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகளுக்கு மிகப்பெரிய விருந்து நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து, மெல்லமெல்ல பிரபலமடைந்த மரியா, தன்னை ரஷிய அரசின் உளவாளியாக சிலரிடம் அறிமுகம் செய்துகொண்டார். பல்வேறு பிரபலங்களுடன் இருக்கும் …

Read More »

GoBackStalin ஹேஷ்டேக்கை வீழ்த்தி தேசிய அளவில் டிரெண்டிங் ஆன WelcomeStalin

GoBackStalin ஹேஷ்டேக்கை வீழ்த்தி தேசிய அளவில் டிரெண்டிங் ஆன WelcomeStalin GoBackStalin ஹேஷ்டேக்கை வீழ்த்தி தேசிய அளவில் டிரெண்டிங் ஆன WelcomeStalin திமுக செயல்தலைவர் ஸ்டாலின் லண்டனில் இருந்து நாடு திரும்பியதை கிண்டல் செய்து பதிவிடப்பட்ட GoBackStalin ஹேஷ்டேக்-க்கு போட்டியாக திமுகவினர் ட்ரெண்ட் செய்த #WelcomeStalin தேசிய அளவில் இடம் பிடித்துள்ளது. திமுக செயல்தலைவர் ஸ்டாலின் லண்டனில் இருந்து நாடு திரும்புவதை ஒட்டி பாஜக மற்றும் வலதுசாரி ஆதரவாளர்கள் GoBackStalin …

Read More »

சிரியா முகாம்களில் ரஷ்யா தாக்குதல்: 10 பேர் பலி

சிரியா முகாம்களின் மீது ரஷ்யப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 10 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இதுகுறித்து போரில் பாதிக்கப்படும் சிரிய மக்களுக்குக்கான உதவும் அமைப்பு ஒன்று கூறும்போது, “சிரியாவின் தென்மேற்குப் பகுதியில் சிரிய அரசுப் படைகள் மற்றும் ரஷ்யப் படைகள் தாக்குதல் காரணமாக தங்கள் இருப்பிடத்திலிருந்து சிரியாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள ஐன் எல்- தினா கிராமத்திலுள்ள ஒரு பள்ளியிலுள்ள முகாம்களில் மக்கள் தங்கியுள்ளனர். அங்கு …

Read More »

அதிமுக, திமுக தலைவர்களும், நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தக்காரர்களும் அமைத்துள்ள சுரண்டல் கூட்டணி: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

அதிமுக, திமுக தலைவர்களும், நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தக்காரர்களும் அமைத்துள்ள சுரண்டல் கூட்டணி: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு அரசியலில் எதிரிகளைப் போலக் காட்டிக்கொள்ளும் இரு திராவிடக் கட்சிகளும் ஊழல் செய்வதிலும், கருப்புப் பணத்தை மாற்றுவதிலும் மட்டும் ஒன்றாக கைகோத்துள்ளன என்று வருமான வரித்துறை ரெய்டு குறித்து அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தப் பணிகளை மேற்கொண்டு …

Read More »

கொழும்பில் மூவருக்கு மரண தண்டனை!

கொலை சம்பவமொன்று தொடர்பில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட மூன்று பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 1996ம் ஆண்டு பன்னிப்பிட்டி பிரதேசத்தில் நபரொருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பில் அவர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. மேலும் , இந்த சம்பவத்தின் போது கொலை செய்யப்பட்ட நபரின் மனைவியை தாக்கி படுகாயமடையச் செய்த நபருக்கு நான்கரை வருடம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. பன்னிப்பிட்டி …

Read More »

மரண தண்டனை பட்டியலின் முதல் பெயர் தொடர்பில் நீதி அமைச்சர் வெளிப்படுத்தியுள்ள தகவல்!

மரண தண்டணை பெயர் பட்டியலில் முதலாவது பெயரே ஒரு பெண்ணுடையது என அமைச்சர் தலதா அத்துக்கோரள தெரிவித்துள்ளார். இரத்தினபுரி – கஹவத்தை பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,போதைப்பொருள் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை பட்டியலில் இடம்பிடித்துள்ளவர்களில் முதன்மையானவர்கள் பெண்களே. அத்துடன் அதிகமாக போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுபவர்களும் பெண்களாகவே இருப்பது கவலையளிக்கும் விடயமாகும். சிறை …

Read More »

நீ யாரு என்ன ஜட்ஜ் பண்ண? சினேகன் குறித்து ரம்யா : பிக்பாஸ் வீடியோ

விஜய் தொலைக்காட்சியில் இன்று ஒளிபரப்பாக உள்ள காட்சிகளின் தொகுப்பு கொண்ட புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. பரபரப்பாக போய்க் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் திடீர் திருப்பமாக, பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்ட கவிஞர் சினேகன் பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ளார். அது தொடர்பான வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், போட்டியாளர்களுக்கு அவர் தமிழ் சொல்லி கொடுப்பது போன்ற காட்சிகளும், நீங்கள் அனைவரும் உண்மையாக இல்லை என அவர் கூறும் காட்சிகளும் வெளியாகியுள்ளது. அதேபோல், …

Read More »