Wednesday , August 15 2018
Breaking News
Home / Indian News (page 4)

Indian News

பெண்ணுடன் ஐ.பி.எஸ். அதிகாரி நெருக்கமாக இருக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பு

பெண்ணுடன் ஐ.பி.எஸ். அதிகாரி நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உள்துறை அதிகாரிகளிடம் விவரம் கேட்டுள்ளதாக துணை முதல்–மந்திரி பரமேஸ்வர் தெரிவித்துள்ளார். தாவணகெரே மாவட்டத்தை சேர்ந்த பெண் தனது கணவருடன், அங்குள்ள கிராமத்தில் வசித்து வருகிறார். அந்த பெண்ணின் கணவர் ஸ்டூடியோ கடை வைத்து நடத்தி வருகிறார். அந்த பெண்ணும், கர்நாடகத்தில் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வரும் ஐ.பி.எஸ். அதிகாரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. …

Read More »

நாடு முழுவதும் 50 பொதுக்கூட்டங்களில் பங்கேற்க பிரதமர் மோடி திட்டம்

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு (2019) நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் மீண்டும் ஆட்சியை தொடர பா.ஜனதா தீவிர முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக நாடு முழுவதும் சென்று அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துரைக்க கட்சி திட்டமிட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி தலைமையில் நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் 50 பொதுக்கூட்டங்களில் …

Read More »

ரஷியாவிடம் இருந்து ரூ.39 ஆயிரம் கோடிக்கு அதிநவீன ஏவுகணைகள் வாங்கப்படும்

ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், 400 கி.மீட்டர் தொலைவில் வரும் போர் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் ஆளில்லாத குட்டி விமானங்களை வழிமறித்து தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ரஷியாவின் எஸ்.400 ரக அதிநவீன வான்வழி பாதுகாப்பு ஏவுகணைகளை இந்திய விமானப்படைக்கு கொள்முதல் செய்வது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன், ‘‘ரஷியாவிடம் இருந்து ரூ.39 …

Read More »

டெல்லி ஆஸ்பத்திரியில் 3 ஆண்களுக்கு வினோதமாக நடந்த சிறுநீரக மாற்று ஆபரே‌ஷன்

டெல்லியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில், டெல்லியைச் சேர்ந்த முகமது உமர் யூசுப் (வயது 37), அஜய் சுக்லா (40) மற்றும் பீகார் மாநிலம் மதுபானியைச் சேர்ந்த கமலேஷ் மண்டல் (54) ஆகியோர் சிறுநீரக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர். ஆனால் ரத்த பரிசோதனையில் அந்த மூவருக்கும் அவர்களுடைய மனைவிமார்களின் சிறுநீரகங்கள் பொருந்தாது என தெரியவந்தது. மேலும் உறவினர்களிடம் இருந்தும் …

Read More »

பாவமன்னிப்பு கேட்க வந்த பெண்ணை கற்பழித்த வழக்கு: கேரள பாதிரியார் போலீசில் சரண்

மலங்கரை ஆர்த்தோடக்ஸ் சிரியன் சபை நிர்வாகத்திடம் இதுதொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் கடந்த மாதம் புகார் செய்தார். அப்போது, அவருக்கும், நிர்வாகிக்கும் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல் அடங்கிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து ஆப்ரகாம் வர்கீஸ் என்கிற சோனி, ஜோப் மேத்யூ மற்றும் ஜாய்ஸ் கே ஜார்ஜ் உள்பட 4 பாதிரியார்கள் மீது கேரள போலீசார் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்தனர். …

Read More »

‘போர்ப்ஸ்’ பத்திரிகையின் பணக்கார பெண்கள் பட்டியல்: 2 இந்திய பெண்கள் இடம் பிடித்தனர்

‘போர்ப்ஸ்’ வெளியிடுகிற பணக்காரர்கள் பட்டியல் உலக பிரசித்தி பெற்றது. இப்போது ‘போர்ப்ஸ்’ பத்திரிகை, அமெரிக்காவில் சுயமாக உருவாகி பணக்காரர்களாகி இருக்கிற 60 பெண்களின் பட்டியலை தயாரித்து வெளியிட்டு உள்ளது. இந்த பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 2 பெண்கள் இடம் பெற்று இருக்கிறார்கள். அவர்கள், ஜெயஸ்ரீ உல்லால், நீரஜா சேத்தி ஆவார்கள். 57 வயதான ஜெயஸ்ரீ உல்லால், லண்டனில் பிறந்து இந்தியாவில் வளர்ந்தவர். அரிஸ்டா நெட்வொர்க்ஸ் என்ற கம்ப்யூட்டர் நெட்வொர்க் …

Read More »

ஓரின சேர்க்கையை குற்றமற்றதாக அறிவிக்கக்கோரும் வழக்கு: ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட்டு முடிவு

ஓரின சேர்க்கையை குற்றமற்றதாக அறிவிக்கக்கோரும் வழக்கை அனைத்து கோணங்களிலும் ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட்டு முடிவு செய்துள்ளது. ஓரின சேர்க்கையை தண்டனைக்குரிய குற்றம் என்று இந்திய தண்டனை சட்டத்தின் 377–வது பிரிவு கூறுகிறது. இந்த சட்டப்பிரிவை அரசியல் சட்டப்படி செல்லாது என்று அறிவிக்கக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, அம்மனுக்களை விசாரித்து வருகிறது. 377–வது சட்டப்பிரிவை …

Read More »

சாரம் இழக்கிறதா சாகித்ய அகாடமி?

இ ந்திய மொழிகளில் வெளிவரும் சமகால இலக்கியங்களைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தும் சாளரமாக விளங்குவது சாகித்ய அகாடமி பதிப்பிக்கும் நூல்கள். சமீப காலமாக அகாடமி வெளியிட்டுவரும் நூல்களின் தலைப்புகளும் உள்ளடக்கங்களும் அந்த நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் நொறுங்கச்செய்யும் வகையில் அமைந்துள்ளது துரதிருஷ்டவசமானது. இலக்கியத்தின் இடத்தை பல்கலைக்கழக பாணியிலான ஆய்வுக் கட்டுரைகள் ஆக்ரமித்துவிட்டதோ என்ற கேள்வியும் எழுகிறது. தமிழில் இலக்கிய வாசிப்புக்குள் அடியெடுத்துவைக்கும் இளம்வாசகர்களுக்குப் பரிந்துரைக்கப்படும் நூல்களில் நேஷனல் புக் டிரஸ்ட் மற்றும் சாகித்ய …

Read More »

ஐடிபிஐ வங்கியில் எல்ஐசி முதலீடு: ஆழ்ந்த பரிசீலனை அவசியம்!

நிதிநிலையில் தள்ளாடிக்கொண்டிருக்கும் ஐடிபிஐ வங்கி யில் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்ஐசி), அந்த வங்கியின் பங்கில் 51% அளவுக்கு முதலீடு செய்யும் உத்தேசத் திட்டத்துக்கு, அங்கீகாரம் வழங்கியிருக்கிறது, ‘இந்தியக் காப்பீடு ஒழுங்காற்று, வளர்ச்சி ஆணையம்’ (ஐஆர்டிஏஐ). அரசுக்குச் சொந்தமான ஐடிபிஐ வங்கி, வாராக் கடன்களின் அதிகரிப்பால் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து, ரிசர்வ் வங்கியின் திருத்த நடவடிக்கைகளுக்கு ஆட்பட்டிருக் கிறது. அந்த வங்கியின் நிதிநிலையைப் …

Read More »

போலீஸ் நிலையத்திலேயே பெண் போலீசை மானபங்கம் செய்த போலீஸ்காரர்

புனே மார்க்கெட் யார்டு போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருபவர் போலீஸ்காரர் சீத்தாராம்(வயது45). இவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு பணியில் இருந்தார். சீத்தாராம் இரவு 12 மணியளவில் போலீஸ்நிலையத்தில் அவருடன் பணியில் இருந்த 26 வயது பெண் போலீசிடம் பாலியல் ரீதியாக பேச தொடங்கி உள்ளார். இதற்கு அந்த பெண் போலீஸ் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். எனினும் அவர் கண்டு கொள்ளாமல் பெண் போலீசை தொட்டு மானபங்கம் செய்து உள்ளார். இதனால் …

Read More »