Home / Indian News (page 5)

Indian News

சிம்லாவில் தண்ணீர் இல்லை சுற்றுலா பயணிகளுக்கு சிக்கல்

இமாச்சல பிரதேச மாநிலம், சிம்லாவில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் சிம்லா நகரில் தங்குவதை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தண்ணீரை சேமிக்க, கட்டுமான பணிகள், கார்களை தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்வதை நிறுத்த இமாச்சல பிரதேச ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மக்கள் அனைவரும் தண்ணீரை சேமிக்க வேண்டும் சமூக வலைதளங்களில் தகவல் பரவப்பட்டு வருகிறது. இங்கு எங்களுக்கே தண்ணீர் இல்லை. அதனால் தயவு செய்து யாரும் இங்கு …

Read More »

கலப்புத் திருமணம் செய்த வாலிபர் – கண்களை தோண்டி படுகொலை செய்த கொடூரம்

கேரளாவில் கலப்புத் திருமணம் செய்த வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோட்டயம் சூரியகவளா பகுதியை சேர்ந்தவர் கெவின்(23). இவர் அதே பகுதியை சேர்ந்தவ நினு (20) என்ற பெண்ணை காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் இதற்கு பெண் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி நண்பர்கள் முன்னிலையில் பதிவு திருமணம் செய்தனர். பின் கெவின் …

Read More »

மையப்புள்ளியில் தமிழருக்கு வைக்கப்படும் முற்றுப்புள்ளி!

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி 18க்கும் மேற்பட்ட கிராம மக்கள், நேற்று 100-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். சனநாயக ரீதியிலான ஒரு கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ஆயிரக்கணக்கானோர் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிச் சென்றுள்ளனர். அப்போது காவல் துறையினருக்கும் மக்களுக்கும் இடையே மோதல் வெடித்ததில் காவல்துறையினர் சரமாரியாக மக்கள் கூட்டத்தை நோக்கிச் சுட்டதில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதுடன் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்தத் துப்பாக்கிச்சூட்டில் …

Read More »

தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி சரியா? குமாரசாமிக்கு எதிராக மனுதாக்கல்

கர்நாடக மாநிலத்தின் தேர்தல் முடிவுகளின்படி பார்த்தால் மக்களின் விருப்பத்திற்கு எதிராக ஒரு ஆட்சி அமைவதாக அரசியல் விமர்சகர்க்கள் ஏற்கனவே கருத்து கூறி வரும் நிலையில் நாளை பதவியேற்கவுள்ள குமாரசாமிக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கர்நாடக தேர்தலில் மொத்தமுள்ள 222 தொகுதிகளில் பாஜக 104 தொகுதிகளிலும், காங்கிரஸ் 78 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற ஜனதாதளம் 37 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இந்த மூன்று கட்சிகளும் மும்முனை போட்டியில் போட்டியிட்டதால் …

Read More »

சுழற்சி முறையில் முதலமைச்சர் பதவி ; காங்கிரஸ் – மஜத கூட்டணியில் புகைச்சல்?

கர்நாடகாவில் சுழற்சி முறையில் ஆட்சி செயல்படுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என குமாரசாமி தெரிவித்துள்ளர். கர்நாடகாவில் எடியூரப்பா பதவி விலகியதை தொடர்ந்து, குமாரசாமி முதல்வர் பதவி ஏற்பது உறுதியாகியுள்ளது. வருகிற புதன்கிழமை அவர் பதவியேற்கவுள்ளார். இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்க்ப்படுகிறது. மதசார்பற்ற ஜனத தள கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவை காங்கிரஸ் வழங்கியுள்ளது. ஆனாலும், சில வருடங்கள் குமாரசாமியும், …

Read More »

கர்நாடக முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா

கர்நாடகாவில் எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்க தடையில்லை என உச்சநீதிமன்றம் கூறிய நிலையில், ராஜ்பவனில் ஆளுனர் முன்னிலையில் எடியூரப்பா தற்பொழுது பதவியேற்றார். பெரும்பான்மையில்லாத பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது. இன்று நள்ளிரவு 1.45 மணிக்கு இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், நீதிபதிகள் ஆளுநரின் முடிவில் தலையிட முடியாது என்றனர்.மேலும் எடியூரப்பா கர்நாடகா முதல்வராக பதவி …

Read More »

படகு கவிழ்ந்து விபத்து: 17 பேர் பலி

ஆந்திரா மாநிலம் கோதாவரி ஆற்றில் 40 பயணிகளுடன் சென்ற படகு விபத்துக்களாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றில் நேற்று பயணிகளை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று புறப்பட்டுச் சென்றது. 40 பயணிகளுடன் அந்த படகு தேவிபட்டினத்தில் இருந்து மாடப்பள்ளி சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென சூறாவளி காற்றுடன், பலத்த மழை பெய்தது. இதனால் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படகில் இருந்த 7 ஆண்கள் மட்டும் கரைக்கு நீந்தி …

Read More »

118 இடங்களில் முன்னிலை ; தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் பாஜக?

ஆட்சி அமைக்க தேவையான இடங்களை விட அதிக இடங்களில் முன்னிலையில் இருப்பதால கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நடைபெற்று முடிந்த கர்நாடக தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், தொடக்கம் முதலே பாஜக முன்னிலையில் வகித்து வந்தது. திடீரெனெ காங்கிரஸ் முன்னிலையில் இருந்தது. ஒருகட்டத்தில் காங்கிரஸும், பாஜகவும் மாறி மாறி முன்னிலையில் இருந்தன. தற்போதைய நிலவரப்படி பாஜக 118, காங்கிரஸ் 58, மஜத 44 இடங்களிலும் …

Read More »

மாநிலங்களின் கட்டுப்பாட்டிலேயே அணைகள் – மத்திய அரசு கருத்தால் அதிர்ச்சி

காவிரி நீர் விவகாரத்தில் மாநிலங்களில் கட்டுப்பாட்டிலேயே அணைகள் இருக்கும் என மத்திய நீர்வளத்துறை செயலர் யு.பி. சிங் கூறியுள்ள கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் முடிந்து விட்ட நிலையில், காவிரி நீர் வழக்கு இன்று உச்ச நீதிமன்றதில் இன்று மீண்டும் தொடங்கியது. அப்போது, காவிரி நீருக்கான வரைவு திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. சீலிடப்பட்ட உறையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த வரைவுக்கு என்னென்ன அதிகாரங்கள் …

Read More »

காவிரி வாரியம் இல்லை

காவிரி நீர் விவகாரத்தில் அமைக்கப்பட்டது குழுதான் எனவும், அது காவிரி மேலாண்மை வாரியத்திற்கு நிகரானது எனவும் மத்திய நீர் வளத்துறை செயலாளர் யு.பி.சிங் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் முடிந்து விட்ட நிலையில், காவிரி நீர் வழக்கு இன்று உச்ச நீதிமன்றதில் இன்று மீண்டும் தொடங்கியது. அப்போது, காவிரி நீருக்கான வரைவு திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. சீலிடப்பட்ட உறையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த வரைவுக்கு என்னென்ன …

Read More »
error: Content is protected !!