Monday , July 23 2018
Breaking News
Home / Poems

Poems

எங்கே?எங்கே? தேடுகின்றேன்

கிளிகள் வந்து கீச்சிடும் முற்றத்து மாமரத்தை தேடுகின்றேன் ஏறி இறங்கி விளையாடிய ஆலமரத்தை தேடுகின்றேன் முற்றத்தில் அழகாய் பூத்துநின்ற செவ்வரத்தையை தேடுகின்றேன் விடிகாலையிலே பால் என்று கதவைத்தட்டும் பாற்கார நண்பனைத் தேடுகின்றேன் ஊஞ்சல் கட்டி ஆடிய கிளிச்சொண்டு மாமரத்தை தேடுகின்றேன் மிதிவெண்டி பயணத்தில் காற்றுக்கு தலையசைக்கும் நெல்வயல்களைத் தேடுகின்றேன் அன்றொருநாள் இரட்டைப்பின்னல் கட்டி துப்பாக்கியோடு தெருவில் பயணித்த தோழியைத் தேடுகின்றேன் வளம் கொழித்த தாயக பூமியைத் தேடுகின்றேன்… ஆ.முல்லைதிவ்யன்

Read More »

தமிழ்த்தேசம்

பனைமரங்கள் எழுந்துநின்று வாழ்த்தி வரவேற்க்கும் ஈழதேசம் வங்கக் கடல் அலைகள் ஆர்ப்பரித்து அன்பு அலைகளாய் முத்தமிடும் நேசம் ஊர் எங்கும் செந்தமிழ் சிந்தி உணர்வு எங்கும் பொங்கும் தமிழ்த் தேசம் பல வளம் கொண்டு வந்தாரை வாழவைக்கும் நற்தேசம் மாவும் பலாவும் வாழையும் ஓங்கி வளர்ந்து நிறைவுதரும் பசுமைத் தேசம் யாருக்கும் விலைபோகா பண்டாரவன்னியன் பரம்பரை வாழ்ந்த வீரத்தேசம் ஆ.முல்லைதிவ்யன்

Read More »