Sunday , December 16 2018
Home / Poems

Poems

Poems

வெளிநாட்டு மாப்பிள்ளை

வெளிநாட்டு மாப்பிள்ளை

வெள்ளைத் தோல் என்றாள் வெளுத்ததெல்லாம் பால் என்றாள் கொள்ளை அழகு என்றாள்… வெளிநாட்டு மாப்பிள்ளையாம்… ஓலைக் குடியில் வாழ்ந்தவள்.. சேலை மறந்தாள்…… சாலையில் காலையும் மாலையும் குட்டைப் பாவாடையில் கும்மாளம் அடித்தாள்….. அலிசேஷன் நாயுடன் அங்காடிக்கு வந்தாள்…. ஊர்நாய்களை கண்டே உதட்டைச் சுழித்தாள்…. தலைமுடி சுருட்டினாள்….. இங்கிலீசில் வெருட்டினாள்…. அதிகாலை வரை அலைபேசியில் SMS உருட்டினாள்……. தனிமையில் சிரித்தாள்.. தாயையும் முறைத்தாள்… ஹை – ஹீல்ஸ் போட்டு ஸ்கூட்டரில் முறுக்கினாள்…. …

Read More »

உனக்குத் தெரியும்.. வயல்வெளிக் காற்றே

உனக்குத் தெரியும்

தமிழ் எங்கள் மூச்சென்றால்.. தமிழீழம் எங்கள் தாயென்றால் தாயின் கற்புக் காக்கவே..எம் தாய்மை துறந்தோம் நாம்……. தமிழை வளர்ப்பதற்கே-எம் தலைமுடி அறுத்தோம்.. தலைவனின் சிரிப்பிலே அம்மாவைக் கண்டோம்.. வலி மறந்து…இரவில் விழி திறந்து — நாம் புலி உடை தழுவியது..எம் மொழியது வாழ்வதற்கே….. எனக்கு நினைவிருக்கிறது… இதோ இந்தப் பனைமர அடியிலே பனங்காய் பொறுக்கி.. பசி போக்கியிருக்கிறோம்… நரிகளின் வாய்கள்- மீண்டுமொரு கிரிசாந்தியை நாசமாக்குவதை தடுக்கவே நாமன்று நெருப்பானோம்…. அதோ…அங்கே.. …

Read More »

அநாதைகள்

தனிமை என்னை தீண்டும் போது.. இதோ இந்தச் சுவருடன் தான் அடிக்கடி கதைத்துக் கொள்வேன்.. இதோ..இந்த நிலைக்கண்ணாடியில் தான் நான் தினமும் ஒரு மனிதனை சந்தித்துக் கொள்வேன்.. நான் சிரித்தால் அவன் சிரிப்பான்.. நான் அழுதால் அவன் அழுவான்.. பாடல்கள் பாடியிருக்கிறேன்- ஆனால்…அவை ஊமைகளின் மொழிகளை போல.. எனக்கு மட்டுமே கேட்கும்.. கவிதைகள் வரைந்திருக்கிறேன் அவற்றை என் பேனா மட்டுமே வாசிக்கும்… என்னைச் சுற்றி ஒருவித நிசப்தத்தை உணர்ந்திருக்கிறேன்.. இரவுகளில்… …

Read More »

விடைபெறுகிறோம் வீடுகளே..

2009 என்னை திரும்பவும் அழைக்கிறது…. மீண்டும் அதற்குள் சென்றால் மீளுவேனோ தெரியாது… ஒரு நிமிடம்…போய் வருகிறேன்.. நிழல்கள் மட்டுமே துணையாக நீண்ட ஒரு பயணம் போனோம்.. பணத்தை மறந்து.. பிணத்தைக் கடந்து… சினத்தை அடக்கிச் சிலுவைகள் சுமந்தோம்….. இனிமேலும் இங்கிருப்பின்.. இறப்பது உறுதி என்று இதயத்துடிப்பு மேளமடிக்க…. அதன் பின்பு தான் அடுத்த பயணம் தொடங்கும்… எட்டு அடி தொட்டு வச்சு எட்டித் திரும்பிப் பார்க்கையிலே இருந்த வீடு.. எரிந்து …

Read More »

இவனொரு சமூகக்கவிஞன் (வீடியோ இணைப்பு)

தன் கவிதை திறமைகளை கற்பனைகளை உதறிவிட்டு நடைமுறைகளை தொகுத்து இலக்கியமாக்கும் இவன் ஒரு இளைய பாரதி. ShareTweetSharePin+10 Shares

Read More »

எங்கே?எங்கே? தேடுகின்றேன்

கிளிகள் வந்து கீச்சிடும் முற்றத்து மாமரத்தை தேடுகின்றேன் ஏறி இறங்கி விளையாடிய ஆலமரத்தை தேடுகின்றேன் முற்றத்தில் அழகாய் பூத்துநின்ற செவ்வரத்தையை தேடுகின்றேன் விடிகாலையிலே பால் என்று கதவைத்தட்டும் பாற்கார நண்பனைத் தேடுகின்றேன் ஊஞ்சல் கட்டி ஆடிய கிளிச்சொண்டு மாமரத்தை தேடுகின்றேன் மிதிவெண்டி பயணத்தில் காற்றுக்கு தலையசைக்கும் நெல்வயல்களைத் தேடுகின்றேன் அன்றொருநாள் இரட்டைப்பின்னல் கட்டி துப்பாக்கியோடு தெருவில் பயணித்த தோழியைத் தேடுகின்றேன் வளம் கொழித்த தாயக பூமியைத் தேடுகின்றேன்… ஆ.முல்லைதிவ்யன் Share20TweetSharePin+120 …

Read More »

தமிழ்த்தேசம்

பனைமரங்கள் எழுந்துநின்று வாழ்த்தி வரவேற்க்கும் ஈழதேசம் வங்கக் கடல் அலைகள் ஆர்ப்பரித்து அன்பு அலைகளாய் முத்தமிடும் நேசம் ஊர் எங்கும் செந்தமிழ் சிந்தி உணர்வு எங்கும் பொங்கும் தமிழ்த் தேசம் பல வளம் கொண்டு வந்தாரை வாழவைக்கும் நற்தேசம் மாவும் பலாவும் வாழையும் ஓங்கி வளர்ந்து நிறைவுதரும் பசுமைத் தேசம் யாருக்கும் விலைபோகா பண்டாரவன்னியன் பரம்பரை வாழ்ந்த வீரத்தேசம் ஆ.முல்லைதிவ்யன் ShareTweetSharePin+10 Shares

Read More »