Thursday , November 15 2018
Home / Sri Lanka News (page 10)

Sri Lanka News

Sri lanka News

வடக்கு – கிழக்கு இணைப்பு வேண்டுமா?

உயிர் இருக்கும்வரை ‘சமஷ்டி’யையும் வழங்கேன் என மைத்திரி திமிர்த்தனம் “வடக்கு – கிழக்கு இணைப்புக்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன். சமஷ்டியையும் வழங்கமாட்டேன். இவற்றைச் செய்ய வேண்டுமாயின் முதலில் என்னைக் கொல்ல வேண்டும்.” – இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றுப் புதன்கிழமை நண்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

Read More »

நாடாளுமன்றத்தைக் கூட்டவே கூடாது! கோட்டா சண்டித்தனம்

இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் தலையீடு செய்ய பல நாடுகள் முயற்சிக்கின்றன என்றும், வெளிநாடுகளின் கோரிக்கைக்கு அமைய நாடாளுமன்றத்தைக் கூட்டக் கூடாது என்றும் கூறியுள்ளார் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ. அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- “மைத்திரி – மஹிந்த அரசில் நான் எந்தப் பதவியையும் பெற்றுக்கொள்ளப் போவதில்லை. தற்போதைய அமைச்சர்கள், மக்களுக்கு அவசியமான நிவாரணங்களை வழங்கி அவர்களின் நம்பிக்கையை பெற வேண்டிய தேவை உள்ளது. அதன் பின்னர், நாடாளுமன்றத் தேர்தலுக்கு …

Read More »

மக்கள் மாற்றுவழி தேடுவதை எவராலும் தடுக்கவே முடியாது!

நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டி, ஸ்திரத்தன்மையை உருவாக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ள சபாநாயகர் கரு ஜயசூரிய, அவ்வாறு இல்லாவிடின் ஜனநாயக உரிமையைப் பாதுகாப்பதற்காக, மாற்றுவழியைத் தேடி மக்கள் செல்வதை எவராலும் தடுக்கமுடியாது என்றும் தெரிவித்துள்ளார். பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவை நியமித்ததுடன், நாடாளுமன்றத்தை, நவம்பர் மாதம் 16ஆம் திகதிக்கு, கடந்த 27ஆம் திகதியன்று ஒத்திவைத்தார். இந்நிலையில், நாடாளுமன்றத்தைக் …

Read More »

மக்கள் படையால் அதிர்ச்சியில் உறைந்தது மஹிந்த அணி!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்தும், அரசமைப்புக்கு முரணாக மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டக் கோரியும் ஐ.தே.கவின் ஏற்பாட்டில் கொழும்பில் நேற்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அலைகடலெனத் திரண்டு ரணிலின் கரங்களைப் பலப்படுத்தியையடுத்து மைத்திரி – மஹிந்த அணியினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் என்று அறியமுடிகின்றது. முன்னதாக, அரச கட்டடங்களுக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் …

Read More »

இலங்கை வருகிறதா ஐ.நா பாதுகாப்பு படை?

இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே திடீரென பதவி நீக்கம் செய்யப்பட்டு புதிய பிரதமராக ராஜபக்சே பதவியேற்றதால் அங்கு அரசியல் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் இன்னும் பிரதமர் என்று கூறி வரும் ரணில், இலங்கையின் பாதுகாப்புக்கு ஐ.நா. படை வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாக கூறப்பட்டது. இலங்கையில் கடந்த 2011ஆம் ஆண்டு விடுதலைபுலிகள் உடனான இறுதிப்போர் நடைபெற்றபோதே ஐ.நா பாதுகாப்பு படை அழைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. …

Read More »

முடிந்தது கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம்!

நாட்டின் பிரதமராக யாரை ஆதரிப்பது என்ற குழப்பம் ஒவ்வொரு அரசியல் கட்சிகளுக்குள்ளும் உருவெடுத்துள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை. கூட்டம் தொடர்ந்து நடைபெறும் எனவும், இறுதியில் கூட்டமைப்பின் அனைத்து எம்.பிக்களும் ஒருமித்து தீர்க்கமான முடிவெடுப்பார்கள் எனவும், அந்த முடிவு தமிழ் மக்கள் நலன் சார்ந்ததாகவே அமையும் எனவும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் …

Read More »

போர்க்குற்றங்களுக்குப் பொறுப்பானவரிடம் ஆட்சி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைகளால் இலங்கையில் ஜனநாயகம் வீழ்த்தப்பட்டுள்ளது என்று ஐ.நாவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் அரசியல் குழப்பங்கள் தொடர்பாக தமது ‘ருவிட்டர்’ பக்கத்தில் சமந்தா பவர் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில், “இலங்கையில் மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைகளால் ஜனநாயகம் வீழ்த்தப்பட்டுள்ளது. அவர் பொறுப்புக்கூறலுக்கு உறுதியளித்தார். ஆனால், இப்போது, போர்க்குற்றங்கள், காணாமல் ஆக்கப்படுதலுக்குப் பொறுப்பான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு …

Read More »

மஹிந்தவை பிரதமராக ஏற்கமாட்டோம்…!

“புதிய பிரதமர் மஹிந்தவையையும் ஜனாதிபதி மைத்திரியையும் ஓரங்கட்டவேண்டிய நேரம் வந்துவிட்டது. அதற்காக நாம் அனைவரும் அணிதிரளவேண்டும். மஹிந்தவை பிரதமராக ஏற்கப்போவதில்லை என ஜனாதிபதியை நேற்றுச் சந்தித்த வெளிநாட்டுத் தூதுவர்கள் திட்டவட்டமாக அறிவித்துவிட்டனர். புதிய அமைச்சரவையையும் அவர்கள் நிராகரித்துவிட்டனர்.” – இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்தும், புதிய பிரதமராக மஹிந்த …

Read More »

மாளிகையிலிருந்து மைத்திரியை விரட்டியடிப்போம்!

ஜனாதிபதி மாளிகையிலிருந்து மைத்திரிபால சிறிசேனவை விரட்டியடிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று ஐக்கிய தேசியக் கட்சி பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்தும், புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் கொழும்பில் இன்று நடைபெற்ற மாபெரும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே முஜிபூர் ரஹ்மான் எம்.பி. இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார். “அலரிமாளிகையிலிருந்து வெளியேறுவதற்கு …

Read More »

வெள்ளியன்று அவசரமாகக் கூடுகின்றது நாடாளுமன்றம்?

நாட்டில் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ள அரசியல் பிரச்சினைக்குத் தீர்வுகாண நாடாளுமன்றத்தை எதிர்வரும் 2ஆம் திகதி வெள்ளிக்கிழமை கூட்டும் தனது தீர்மானத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவித்துள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். சபாநாயகர் தலைமையில் இன்று நண்பகல் நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார். நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த …

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com