Sunday , October 21 2018
Home / Sri Lanka News (page 28)

Sri Lanka News

Sri lanka News

மைத்திரி முன்னெடுத்த இன்னொரு ஒப்பரேசன்

“பௌதிக ரீதியாக பயங்கரவாதிகளைத் தோற்கடித்த போதிலும், அவர்களின் கொள்கையைத் தோற்கடிக்க முடியாது போயுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக, சர்வதேச ஒத்துழைப்புடன் அந்தக் கொள்கையைத் தோற்கடிப்பதற்கே முயன்று வந்தேன்“ கடந்த 8ஆம் திகதி பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து, கொள்கை விளக்க உரை நிகழ்த்திய போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு கூறியிருந்தார். இதற்கு முன்னரும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட பலரும், போரில் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த போதிலும், …

Read More »

தேர்தல் காலங்களில் மன்னார் நகரத்தை அபிவிருத்தி செய்வதாக வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதும் அவை நிறைவேற்றப்படவில்லை-

மன்னார் நகரத்தை பொறுத்த மட்டில் கடந்த காலங்களில் பல அபிவிருத்தித்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என தேர்தல் காலங்களில் ஒவ்வொறு கட்சிகளும் வாக்குறுதிகளை வழங்கினாலும் மன்னார் நகரத்தை பொறுத்த மட்டில் இன்று வரை அபிவிருத்தித்திட்டம் பின்னடைவில் இருந்து வருகின்றது என மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்தார். மன்னார் நகர சபையில் இன்று வெள்ளிக்கிழமை(11) காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு …

Read More »

மன்னார் உயிலங்குளம் பகுதியில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட பேரூந்தின் சாரதியான வில்லியம் மற்றும் 67 பொது மக்களுக்கு வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அஞ்சலி

மன்னார் உயிலங்குளம் பகுதியில் கடந்த 1985 ஆம் ஆண்டு பேரூந்தில் வைத்து இலங்கை இராணுவத்தினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட பேரூந்தின் சாரதியான வில்லியம் மற்றும் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட 67 பொது மக்களுக்கும் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று சனிக்கிழமை மாலை அஞ்சலி செலுததியுள்ளார். இன்று சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் உயிலங்குளம் பகுதியில் சுடர் ஏற்றி பூ தூவி அஞ்சலி செலுத்தினார். இலங்கை அரச படைகளினாலும் துணை நடவடிக்கைகளினாலும் …

Read More »

காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் தொடர்பில் தமக்கு நம்பிக்கை இல்லை

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் கடத்தப்பட்டோர் விடையம் தொடர்பில் ஆராய்வதற்காக எத்தனை குழுக்கள் நியமிக்கப்பட்டாலும், எத்தனை அலுவலகங்கள் திறந்தாலும் குறித்த குழுக்கள் மற்றும் அலுவலகங்களில் எமக்கு நம்பிக்கை இல்லைஎன மன்னார் மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர். காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் அதன் பிராந்திய மட்ட ஆலோசனை நடவடிக்கைகளை இன்று சனிக்கிழமை(12) முதல் கட்டமாக மன்னாரில் ஆரம்பித்துள்ளது. -காணாமல் போனவர்களுக்கான ஆணைக்குழுவின் தலைவர், ஜனாதிபதி …

Read More »

‘மே 18’- தமிழ்த் தேசிய துக்­க­ தினம்

முள்­ளி­வாய்க்­கால் இனப்­ப­டு­கொலை நினைவு நாளான மே 18ஆம் திக­தியை, தமிழ் இன அழிப்பு தின­மா­க­வும், தமிழ்த் தேசிய துக்க நாளா­க­வும் அறி­வித்து வடக்கு மாகாண சபை­யில் தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டது. வடக்கு மாகாண சபை­யின் 122ஆவது அமர்வு கைத­டி­யில் உள்ள பேர­வைச் செய­ல­கத்­தில் அவைத்­த­லை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம் தலை­மை­யில் நேற்று முற்­ப­கல் நடை­பெற்­றது. மே 18 ஆம் திக­தியை இன­அ­ழிப்பு நாளாக அறி­விக்­க­வேண்­டும் என்று வடக்கு மாகாண சிறு­வர் மக­ளிர் விவ­கார அமைச்­சர் …

Read More »

இராணுவத்தில் இணையுங்கள்!!

வடக்கு இளைஞர்களை இராணுவத்தில் இணைய முன்வருமாரு யாழ்ப்பாண மாவட்ட இராணுவக் கட்டளைதளபதி மேஜர் ஜெனரல் தர்சன கெட்டியாராட்சி அழைப்பு விடுத்தார். சிங்கள டிப்ளோமா கற்கைநெறியைப் பூர்த்தி செய்த 600 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி மண்டபத்தில் இன்று நடைபெற்றது. அதில் அவர் மேலும் தெரிவித்ததாவது, வடக்கு மக்கள் மிகவும் புத்திசாலிகள் நல்லவர்கள் எனினும் கடந்த 30 வருடப் போர் வடக்கு மக்களையும் தெற்கு மக்களையும் சற்று …

Read More »

யாழில் இருந்து விடை பெறும் நீதிபதி இளஞ்செழியன்

யாழ். மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனிற்கு நீதிச்சேவைகள் ஆணைக்குழுவால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அவருடன் இணைந்து, மேல் நீதிமன்ற நீதிபதிகளான பாலேந்திரன் சசிமகேந்திரன், அன்னலிங்கம் பிரேமசங்கமர் ஆகியோருக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வருடாந்த இடமாற்றத்தின் கீழ் மூன்று ஆண்டுகள் ஒரே மாகாணத்தில் மேல் நீதிமன்ற அமர்வில் கடமையாற்றியதன் அடிப்படையில் நாடு முழுவதும் மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டு வருகின்றது. இதனடிப்படையில், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், …

Read More »

சிறுவர் சேமிப்புக்கான வரி நீக்கம்!!

18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் வங்கிகளில் உள்ள சேமிப்புக் கணக்குகளுக்கு விதிக்கப்பட்டிருந்த வரியை நீக்குவதற்கு அரசு தீர்மானித்துள்ளது என்று நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Read More »

வடக்கு, கிழக்கில் 522 ஏக்கர் காணிகளை விடுவிக்க இணக்கம்!!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணப்படுகின்ற தனியார் காணிகளில் 522 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கு இலங்கை இராணுவம் இணக்கம் தெரிவித்துள்ளது எனத் தெரியவருகிறது. அதனடிப்படையில், போரால் பாதிக்கப்பட்ட தனியார் இடங்களை விடுவிக்கும் போது அவற்றில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்கள் வேறு இடத்தில் மீள அமைக்கப்படவுள்ளன. அவற்றை அமைப்பதற்கு செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ள 866.71 மில்லியன் ரூபாவை இலங்கை இராணுவத்துக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் …

Read More »