Wednesday , November 14 2018
Home / Sri Lanka News (page 40)

Sri Lanka News

Sri lanka News

சுற்றுச்சுழல் பாதுகாப்பு தொடர்பான விழிர்ப்புணர்வு பேரணி (படங்கள் இனைப்பு)

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழலின் பாதுகாப்பின் அவசியத்தை வழியுறுத்தி மன்னார் நகரில் உள்ள பாடசாலை மாணவர்களை ஒன்றிணைத்து இன்று (30) புதன் கிழமை காலை 10 மணியளவில் விழிர்ப்புணர்வு பேரணி மற்றும் சிரமதான நிகழ்வு இடம் பெற்றது. மன்னார் மாவட்ட சுற்றாடல் அதிகார சபையும்,மன்னார் வலயக்கல்வி பணிமணையும் இணைந்து குறித்த விழிர்ப்புணர்வு பேரணியை முன்னெடுத்தனர். காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் குறித்த பேரணி ஆரம்பமானது. …

Read More »

மன்னாரில் மனித எலும்புக்கூடு (படங்கள் இனைப்பு)

மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்து உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புகள் அகழ்வு பணிகள் இன்று(30) புதன் கிழமை 3 ஆவது நாளாக இடம் பெற்று வருகின்ற போதும் இன்றைய தினம் மன்னார் பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு அகழ்வு பணிகளின் போது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்வதினை அதிகாரிகள் மட்டுப்படுத்தியுள்ளனர். ‘லங்கா சதொச’ விற்பனை …

Read More »

இலங்கையின் மூத்த குடிகள் தமிழரே, துட்டகைமுனுகூட சிங்களவனாக இருக்க முடியாது

இலங்கையின் மூத்தகுடிகள் தமிழரே. சிங்களமொழி கி.பி 6ஆம், 7ஆம் நூற்றாண்டுகளிலேதான் வழக்கத்திற்கு வந்தது. அதற்கு முன்னர் வாழ்ந்தவர்களைச் சிங்களவர் என்று அழைக்க முடியாது. துட்டகைமுனு கூட சிங்களவனாக இருந்திருக்க முடியாது. இந்த உண்மையை அப்பாவிச் சிங்கள மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள் என, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விநயமாகக் கோரிக்கை விடுத்துள்ளார். டி.என்.ஏ பரிசீலனைகள் இன்றைய சிங்களவர் ஆதித்திராவிடரே என்று கூறுகின்றன. தமிழர் பற்றிய உண்மையை அறிந்து கொண்டால் சிங்கள …

Read More »

சீரற்ற வானிலை-24 பேர் பலி

சீரற்ற வானிலையால் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால் இதுவரையில் 24 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் 13 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்த நிலையம் இன்று பிற்பகல் 1 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. சீரற்ற வானிலையால், 45,680 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 174,310 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் பாதிக்கப்பட்ட 17,976 குடும்பங்களை சேர்ந்த 70,376 பேர் 265 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதுவரையில் 121 வீடுகள் …

Read More »

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் இருந்து றெட்பானா விசுவமடுவுக்கு இரவு 12 மணிக்கு சண்டை போட சென்ற 11 இளைஞர்களில் இருவர் உயிரிழப்பு

தர்மபுரம்,றெட்பானா.இளைஞர்கள் அண்மைக்காலமாக கள்ள மரம் வெட்டும் வேலையில் ஈடுபட்டதோடு இரு பகுதிகளுக்கிடையில் முறுகல் நிலை ஏற்பட்டு வந்ததோடு றெட்பானா காட்டுக்குள் தர்மபுர இளைஞர்கள் சென்று மரம் வெட்டுவதை இலங்கை வனவள பாதுகாப்பு அதிகாரிகளுக்கு முறையிட்டதை அடுத்து தர்மபுர இளைஞர் கூட்டமொன்று றெட்பானா இளைஞர் கூட்டத்தை தாக்குவதற்காக இரவு 12 மணிக்கு புறப்பட்டு றெட்பானா இளைஞர்கள் வீடுகளை முற்றுகையிட்ட பின்னர் முறுகல் நிலை வெடித்து தர்மபுர இளைஞர்களை ஓட ஓட துரத்தியுள்ளனர் …

Read More »

நாளை கிளிநொச்சியில் பேரூந்து உரிமையாளர்கள் பணி புறக்கணிப்பு!

கிளிநொச்சி பேரூந்து உரிமையாளர்கள் பாதிப்படையும் வகையில் வட மாகாண போக்குவரத்து அதிகார சபையால் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த சேவைப் புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தில் நாளை அனைத்துப் பேருந்து ஊழியர்களும் சேவைப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர் என்று மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் நா.நகுலராஜா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி பேரூந்து உரிமையாளர்கள் பாதிப்படையும் வகையில் வட மாகாண போக்குவரத்து அதிகார சபையால் மேற்கொண்ட …

Read More »

நுரைச்சோலை இயந்திரங்கள் தற்காலிகமாக நிறுத்தம்!

அத்தியவசிய திருத்தப் பணிகள் காரணமாக நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டு மின் பிறப்பாக்கி இயந்திரங்களை தற்காலிகமாக நிறுத்துவதற்கு இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இன்று (26) காலை முதல் இரண்டாவது மற்றும் மூன்றாவது மின் பிறப்பாக்கி இயந்திரங்களை நிறுத்துவதற்கு தீர்மானித்ததாக அந்த சபை கூறியுள்ளது. அதன்படி தற்போது முதலாவது மின் பிறப்பாக்கி இயந்திரத்தின் மூலம் மாத்திரம் மின் உற்பத்தி செய்யப்படுவதாகவும், அதனூடாக தேசிய மின்சார கட்டமைப்புக்கு …

Read More »

கோட்டாபய போட்டியிட்டால் நான் கட்டுப்பணம் செலுத்துவேன்!

அடுத்து நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ போட்டியிடுவதாக இருந்தால், தேர்தலுக்காக அவர் செலுத்த வேண்டிய கட்டுப்பணத்தை அவர் சார்பில் தான் செலுத்த தயார் என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இன்று (25) கம்பஹாவில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் சரத் பொன்சேகா, கோட்டாபய ராஜபக்‌ஷ நாட்டில் பாதுகாப்பு செயலாளராக …

Read More »

சிறிலங்காவில் 6,000 சீனப் பணியாளர்கள்!

சிறிலங்காவில் சீனாவால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களில் சுமார் 6,000 சீனர்கள் பணியாற்றுகின்றனர் என, கொழும்பிலுள்ள சீனத் தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தகப் பிரதிநிதி தெரிவித்துள்ளார். இவர்களில் பெரும்பாலானோர், சிறிலங்காவிற்கு தொழில்நுட்பம் குறித்த பயிற்சிகளை வழங்குவதற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனரென, அவர் தெரிவித்துள்ளார். கொழும்புத் துறைமுக நகர் வேலைத்திட்டம், ஹம்பாந்தோட்டை துறைமுக வேலைத்திட்டம், நெடுஞ்சாலைகள் நிர்மாணிப்புப் போன்ற கட்டுமானப் பணிகளிலும் சீன நாட்டவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Read More »

‘இறந்தவர்களை நினைவுகூர்தல் தேசத் துரோகக் குற்றமா?’

இறந்தவர்களை நினைவுகூர்தல் தேசத் துரோகக் குற்றமா? எனக் கேள்வியெழுப்பியுள்ள, ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளர் வி.ஜனகன், தனியார் வங்கியொன்றின் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். மே 18ஆம் திகதி கிளிநொச்சியில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றில் நினைவேந்தல் நிகழ்வினை செய்தமை தொடர்பில், குறித்த வங்கியின் முகாமையாளர் ஒருவரும் சிற்றூழியர் ஒருவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனரெனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளர் வி.ஜனகன் வெளியிட்டுள்ள கண்டன …

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com